பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 29

தாங்கவியலாது அவளது எழிற்கழுத்தும் தளர்ந்தது. புகழ்ச்சியை ஏற்கத் தொடங்கிய உடனே நாணம் முனைந் தெழுந்து ஆட்சி செய்தல் நற்குடிப் பெண்களது இயல் பன்ருே தளர்ந்த கழுத்தையும் தாழ்ந்த தலையையும் நிமிர்த்துத் துரக்க, மகளே, ஒரு மனையாளை உனக்கும் அறிமுகப்படுத்தாமலோ விடுவேன்'-என்றவள்ளுவரது குரலோசையால்தான் முடிந்தது. நிமிர்ந்தாள் மங்கை; அமர்ந்து நோக்கினுள். கனிந்து பேசினர் தந்தை :

சுடுசோறுண்ணுத சேயிழை

மகளே, ம ல ர ன் ன கண்ணுளொருத்திக்குக் கண்ணன்ன கேள்வன் ஒருவன் அமைந்தான். இருவரும் ஒன்றிய காதலொடு மகிழ்ந்து வாழ்ந்தனர். ஒருநாள் காலே அவன் பணி ஒன்று கருதிப் புறத்தே சென்றன். அவன் பிரிவு அவளுக்குத் தாங்க இயலாததாயிருந்தும் அவனது கடமை தன்னுல் தடைப்படுதல் கூடாதென அமைந்திருந்தாள். அவனும் உடலால் பிரிந்தானே யன்றி உள்ளத்தாலும், காட்சியாலும் அவளேவிட்டு நீங்கினனல்லன். அவன் புறத்தே செல்லும்போது செய்துகொண்ட ஒப்பனை செறிந்த அழகு அவளது கண்ணை விட்டு அகலவில்லை. கண்ணில் நின்றதோடு கண் வழியே சென்று உள்ளத்திலும் உறைந்தது. ஆகவே, கண்ணுள்ளே கலந்து நின் ருன் , நெஞ்சத் துள்ளே நிறைந்திருந்தான். எவ்வாறு அவளுக்குப் பிரிவு தென்படும்.

அவன் காலேயில் சென்ருன். அந்நேரத்தில் அரும் பிப் பகலெல்லாம் முகையாகி மாலையில் மலருவதன்ருே காமம். அதை நோயாக்கிவிடாமலும், நோயாக்கிக்