பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 53

கண்ணிலும் நெஞ்சிலும் நிறுத்தி மனையாள் மகிழ வேண்டும். பிரிவு இன்றியமையாதது. ஆயினும் மனை யாளது துன்பமறிந்து உரிய காலத்தே மீள வேண்டும். மீண்டவனிடம் குறை காணுதல் கூடாது. குறை முனைத்து எழுந்தால் ஊடல் இன்றியமையாதது. அதனையும் வரையறையோடு கொள்ள வேண்டும். ஊடலை மணுளன் ஏற்று அருள் செய்ய வேண்டும். உள்ளம் ஒன்றி, உடல் ஒன்றி, உயிர் ஒன்றி வாழ்தல் வேண்டும். இவ்வகையான வாழ்வியல் கருத்துக்களைப் பெற்றீர்கள்.

இவைகளையெல்லாம் உ ல க த் த ர் யாவரும் உணர்ந்து வாழ்வை மேற்கொண்டார்கள் எனக் கூற இயலாது. அதனுல்தான் காமத்தின் செவ்வி தலைப் பட்டவர் சிலராயினர். நீங்கள் அச்சிலரில் இருவராக வாழத்தக்கவர்கள் வாழ்க 1-என்ருர் வள்ளுவர்.

காதல் வாழ்க்கைக்கு அவர் அமைத்த நல்வழிகளே இவைகள். இக்கருத்துரைகளே இல்லற வாழ்விற்கும் வழிகாட்டிகளாய் விளங்குவன.-இல்லறத்தை மண மலராக்கிக் கொள்ள வேண்டும் , அதனை ஒத்த உள்ளத் தினராக நடத்திச் செல்ல வேண்டும். இல் றச் சிறப் பிற்கு உடலும் உயிருமாய் ஒத்துழைக்க வேண்டும். 'ஒருவர் மற்றவருக்கு இன்றியமையாதவராய் வாழ வேண்டும். மேற்கொண்ட வினையை உரிய காலத்தில் முடிக்கும் வல்லுநராக வேண்டும். வாழ்வில் குறைகளைக் கண்டு அவற்றைப் பெரிதாக்குதல் கூடாது. மனத் தாங்கல்களை மனக்கசப்பிற்கும் மனமாற்றத்திற்கும் இழுத்துச்செல்லும் அளவு வளர்க்கக்கூடாது; அன்பால் மாற்ற வேண்டும்-எனும் உண்மைகளை வள்ளுவரின் கனிவுரைகளால் சிந்தனைத் தெளிவு பெற்ற கண்ணனும் கண்ணம்மாவும் உணர்ந்தனர். -