பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளுவர் வாழ்த்து

ஒத்த உணர்ச்சியினராய் இருவரும் மீண்டும் வள்ளு வப் பெருந்தகையைப் பணிந்தனர். அவரும் உளம் மகிழ்ந்து மணமக்காள், வாழ்க வாழும் வகையறிந்து வாழ்க : வையத்து வாழும் வகையறிந்த வாழ்வால் வானுறையும் தெய்வமாக மதிக்கப்படுக !' - என்று மீண்டும் வாழ்த்தினர். - ... . . .

வாழ்த்தை ஏற்ற கண்ணம்மா வாழும் வகையறிந்து வாழ்க, வாழும் வகையறிந்து வாழ்க -என்று இருமுறை வாய்க்குள் உச்சரித்துக் கொண்டாள். அத்தொடர் பொருள் பொதிந்த தொடராக அவளுக்கு மிளிர்ந்தது. இவ்வுச்சரிப்பாம் தேளுேசையைக் கேட்ட கண்ணன் , " தந்தையே, வாழும் வகையறிந்து வாழ்க என்பதை ஏற்று மகிழ்ந்தோம். தாங்கள் இதுவரை விளக்கிய வைகள் வாழும் வகைக்கு ஒரு பகுதி யென்று கருது கின்றேன். மேலும் விரிவான விளக்கம் பெற அருள்க !' -என்ருன். - -

ஆம், வாழும் வகையறிந்துதான் வாழ வேண்டும் ; தெய்வமாகவே ஆக வேண்டுமன்ருே இதுவரை ஏற்கப் பட்ட கருத்துக்கள் காதலரது உள்ளத்தைப் பண்படுத்து வன. மேலும், இல்லற வளத்திற்குரிய மொழியையும், செயலேயும் பண்படுத்துவன உண்டு. அவை விரிவாக அறியத்தக்கன. இதுபோது அந்திக் காலமாயிற்று. நீவிர் இல்லம் சென்று ஒருநாள் வருக ! வகைகளைப் பகுதி பகுதியாகக் காண்போம். - என்று வாழ்த்திய வாறே உள்ளே சென்ருர் வள்ளுவர்.

மணமக்கள் எழுந்து வணங்கி அவரது திருவுருவைக் கண்டு களித்தவர்களாய் - மலர்ச் சோலைகளாய் நகர்ந் தனர். அவர்களைப் பின் தொடர்ந்து தென்றல் ஓடிற்று. அது தங்களை ஊடறுத்துப் போக அவர்கள் இடந்தர வில்லை. - -