பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 65

  • இல்வாழ்க்கை அன்பு உடையதாக அமையின் அவ் வுடைமையே இல்லறப் பண்பு ஆகும். இல்வாழ்க்கை அறத்தின் வழி அமையின் அவ்வமைப்பே இல்லறப்பயனைத் தருவதாகும்.

இவைதான் இல்வாழ்வின் இயல்பான நடை முறைகள் மகனே. இவற்றைக் கைக்கொண்டு ஒழுகினல் பிற அறத்தார் இல்லறத்தார்க்குப் பின் நிற்கக்கூடியவரே அன்றி முன் நிற்கக் கூடிய தகுதிபடைத்தோர் ஆகார்.

ஒப்பில்லாச் சிறப்பினது

தப்பில்லா இல்லறம்

' தந்தையே, அவ்வாருயின் இல்லறத்தார் துற வறத்தாரை விட மேம்பட்டவரோ ?'

'ஆம் மகனே ஐயமென்ன? துறவறத்தார் இல்லறத் தாரைப் போல அறப்பயனை எளிதில் அடைபவரல்லர். துறவறம் என்ருல் ஐம்புலன்களை அடக்கித் தவம்புரிதல் வேண்டும் ; அவைகளை வெல்ல வேண்டும். உடலை வருத்தி முயலவேண்டும். ஆகவே, இல்லறத்தான் ஒரு வகையில் மட்டும் மேம்பட்டவனல்லனே பெறும் பயனல், கொள்ளும் முயற்சியால், ஆற்றும் வலிமையால்; அறத்தால் ஆகிய நால்வகையாலும் மேம்பட்டவன்.

  • பழிக்கு அஞ்சுவதும், பகுத்துக் கொடுத்து உண்ணு வதும் ஆகிய அறவழியிலே இல்லறத்தை நடத்தில்ை

~~ససెసస:సిసXసిపుచిపుషిపు: * அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

  • அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவ தெவன்?