பக்கம்:வழிகாட்டி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 29

பேரூரும் சிற்றுருமாக நாடு முழுவதும் ஊர்கள் இருந்தன. பேரூர்களில் நான்கு தெருக்கள் கூடும் சதுக் கமும் பல தெருக்கள் கூடும் சந்தியும் இருந்தன. அத்தகைய பேரூர்களில் ஒன்று மதுரை. அதில் பெரிய மதில் இருந்தது. மதில் வாயிலில் பாண்டியனது கொடி பறந்தது. பந்தும் பாவையும் நெருங்கின. பகைவர் வந்தால் அவற்றை ஆடும் பெண்களைப் போலப் புக வேண்டுமென்ற குறிப்பை அவை இரண்டும் உணர்த்தின. நகரத்தில் செல்வ வளம் மிக்க கடைவீதிகள் இருந்தன. மாடங்கள் பல இருந்தன. மாடமலி மறுகுகள் இருந்தன. குளம் வெட்டிச் சோலை வளர்த்துச் சபை கூட்டி வாழ்ந்தனர் தமிழர். மன்றமும் பொதியிலும் கோயிலும் அவர் கூடும் இடங்கள்.

பல இசைக் கருவிகளை அவர்கள் வாசித்தார்கள். குழலும் கோடும் சங்கும் ஊதினர். யாழ் வாசித்தனர். மணி ஒலித்தனர். முரசும் முழவும் தொண்டகப் பறையும் துடியும் அடித்தனர். குறிஞ்சிப் பண் பாடினர். குரவைக் கூத்தும் துணங்கைக் கூத்தும் ஆடினர்.

இன்பத்துக்குரிய தாரும், அடையாள மாலையா கிய கண்ணியும், ஆயுதமும், கொடியும், வாகனமும் தலைவனுக்குரியவை; கொடியை வாழ்த்துவதும், யானையை வாழ்த்துவதும், களம் பாடுவதும் தலைவன் புகழைப் பாராட்டும் வகைகள். ஆடையைப் புரளப் புரள உடுத்தல் தலைவன் இயல்பு. ஈர உடையோடே வழிபடல் அந்தணர் இயல்பு. உள்ளொன்றும் புறம் பொன்றுமாக இரு வேறு நிறம் பெற்ற ஆடையை உடுத்துப் பூசை போடுவது குறமகள் வழக்கம். முடி, குழை, தொடி, வளை, பொன்னரி மாலை, முத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/31&oldid=643585" இலிருந்து மீள்விக்கப்பட்டது