பக்கம்:வழிகாட்டி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வழிகாட்டி

மாலை, மேகலை, பருமம், கழல், கிண்கிணி, சீதேவியென்னும் தலைகோலம், வலம்புரி, மகரவாய் என்பன அக்காலத்து ஆபரண வகைகள். பொன்னாபரணங் களை அணிதல் ஆடவருக்கும் மகளிருக்கும் சிறப்பைத் தந்தது. முருகனை, “பொலம்பூண்சேய்' என்றும், உமா தேவியை, 'இழையணி சிறப்பிற் பழையோள் என்றும் சொல்வதிலிருந்து இது புலப்படும்.

கண்ணியாகவும் மாலையாகவும் மலரைக் கட்டி அணிதல் ஆடவர் வழக்கம். பெண்கள் தலையில் விடு பூவாக வைத்துக் கொள்ளுதலும், இரட்டைப் பூவாகத் தொடுத்துத் தலைக்கோலத்தைச் சுற்றி வளைத்துக் கட்டு தலும், கொத்தாகச் செருகிக் கொள்ளுதலும், காதில் தளிரைக் குழையாகச் செருகிக் கொள்ளுதலும், மாலை புனைதலும் வழக்கம். தழையும் பூவும் கலந்து அமைந்த ஒருவகை ஆடையை இடையில் உடுத்தனர். சந்தனத்தைப் பூசி அதன்மேலே கடம்ப மலர்த்தாதைத் திமிர்ந்து அதன் மேலே விளாவின் இளந்தளிரைக் கிள்ளி அப்பிக் கொண்டனர். ஆடை, அணி, மலர் என்பன அழகுக் கோலம் புனைய இன்றியமையாதன என்ற உணர்வு அக்காலத் தமிழருக்கு இருந்தது.

முருகனைப் பற்றிய புகழை வெளியிடும் நூல் இது. ஆனாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் இயற்றியதாதலின் அவர் காலத்து மணம் இதில் வீசுவது இயற்கையே. தெய்வங் கொள்கையில் ஊறி நின்ற தமிழர் இயற்கையழகை நுகர்ந்து நாகரிக வாழ்வு நடத்தி வாழ்ந்த செய்தியை இப்பாட்டு, போகிற போக்கிலே தெளிய வைக்கிறது. முருகன், மக்கள் யாவரும் தேவரும் மூவரும் வழிபடும் சமரசத் தெய்வமென்று காட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/32&oldid=643586" இலிருந்து மீள்விக்கப்பட்டது