பக்கம்:வழிகாட்டி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 31

தோடு நில்லாமல், அவனை வழிபடுவாரை வருணிக் கும் வாயிலாக நாட்டுநிலையையும் மக்கள் உள்ளப் பாங்கையும் நம்பிக்கைகளையும் காட்டியிருக்கிறார் நக்கீரர். சங்க காலத்துச் செய்யுளுக்கு இயல்பான இயற்கை வருணனையையும் இந்நூலிலே காணலாம்.

நக்கீரர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந் திருந்தாலும், அவர் வருணித்த மகளிரும் வாழ்க்கையும் இன்று மாறிப் போயிருந்தாலும் முருகன் இன்றும் சமரசத் தெய்வமாக விளங்குகிறான்; மனங்கமழ் தெய் வத்து இளநலம் உடையவனாக வழிபடப் பெறுகிறான். அவன் என்றும் அழியாத இளநலத்தோடு அன்பர் உள்ளத்தில் இலங்குவது போலத் தமிழ்மொழியும் இவ் வளவு காலமும் கடந்து நின்று இன்றும் கன்னித் தமிழாக நிலவுகிறது. நக்கீரர் பாடிய முருகனை, அவர் பாடிய தமிழாலே அவருக்குப் பின்னே எத்தனையோ புலவர்கள் பாடியிருக்கிறார்கள். வேறுபட்ட பலபல இடங்களிலே பலபல வேறுபாடான வழிபாடுகளிலே முருகன் தெய்வமாக விளங்கியதுபோலப் பல பல காலங்களிலே யும் பல பல வேறு பாட்டினிடையே அவன் தெய்வமாக விளங்கிவருகிறான். அவனைப் பாடிய தமிழ் நூல்கள் அந்த வேறுபாட்டு நயத்தைத் தெளிவிக்கின்றன. நாளடைவில் கதைகள் வேறுபட்டன; கருத்துக்கள் விரிந்தன; வழக்கங்கள் வேற்றுமை அடைந் தன. ஆனால் முருகன் மாத்திரம் தமிழ் முருகனாக அன்று போலவே இன்றும் இருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/33&oldid=643588" இலிருந்து மீள்விக்கப்பட்டது