பக்கம்:வழிகாட்டி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டி

சென்னை மாநகரில் ஒரு நண்பரைத் தேடிக் கொண்டு கிராமவாசி ஒருவர் வருகிறார். நண்பருடைய பெயர் மாத்திரம் தெரியும்; ஒருவாறு தெருவும் தெரியும். ஆனால் வீட்டு எண்ணை மறந்துவிட்டார். அவர் எத்தனை மணி நேரம் அலைந்தாலும் கால் கடுக்க நடப் பதுதான் மிச்சமாக முடியுமேயொழிய வீட்டைக் கண்டு பிடிக்க இயலாது. ஆனால் யாராவது புண்ணியவான் தெருவைச் சுட்டிக்காட்டி, அங்கே போய் விசாரியுங்கள் என்று வழிகாட்டினால், அலைந்த திரிந்த அந்தக் கிராம வாசிக்கு எவ்வளவோ ஆறுதல் உண்டாகும். வழி காட்டியவனை வாயார வாழ்த்துவார்.

இந்த நகரத்தில் வழிகாட்டுபவருக்கே இவ்வளவு கெளரவம் இருந்தால், போகமுடியாத இடங்களுக்கு, இமாசலத்தைப் போன்ற அரிய இடங்களுக்குப் போக வழி காட்டுபவர்களுக்கு எவ்வளவு கெளரவம் இருக்க வேண்டும் மோட்ச லோகத்துக்கு வழிகாட்டிகளாக நிற்கும் ஆசாரியர்களுக்கு உள்ள கெளரவத்தைக் கொண்டு, வழிகாட்டும் தொண்டின் பெருமையை ஒரு வாறு ஊகித்துக் கொள்ளலாம்.

பாதையில் வழிகாட்டக் கைகாட்டி மரங்களும்,

பல ஊர்களுக்கு வழிகாட்ட யாத்திரைப் புத்தகங்களும் உதவி செய்கின்றன. ரெயில் வேக்காரர்கள் அவ்வப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/34&oldid=643589" இலிருந்து மீள்விக்கப்பட்டது