பக்கம்:வழிகாட்டி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 67

யரானாலும் அலங்காரப் பிரியர்களே. மனமாரக் கோலம் செய்து கொண்டு சூரரமகளிர் பலர் ஒருங்கே கூடி மகிழ்ச்சியோடு ஆடுகிறார்கள். ஆடும்போது, மலைக்குத் தெய்வமும் அழகனுமாகிய முருகனைப் பாடுகிறார்கள். அவனுடைய வீரத்தால் விளைந்த வெற்றியின் பயனாகவே தேவலோகத்துக்குச் சுதந்தரம் வந்தது. தெய்வ மகளிரும் தம் மனம் போனபடி ஆடிப் பாடி விளையாட முடிந்தது. ஆகவே, முருகனுடைய வெற்றித் திறத்தை நினைந்து, 'சேவலை உயர்த்தி முரு கனுடைய வெற்றிக் கொடி நெடிது வாழ்க!' என்று பாடி வாழ்த்துகிறார்கள். அந்த வாழ்த்தொலியானது மலை முழுதும் சிலம்புகிறது. கண்டாருக்குத் தம் அழ கினால் அச்சத்தை உண்டாக்கும் இயல்பு படைத்தவர் களாதலின் அவர்களைச் சூரர மகளிர் என்று சொல்வது தமிழ் வழக்கு. (சூர் - அச்சம்.)

அவர்கள் முருகனது கொடியை வாழ்த்திப் பாடு கின்ற சோலையென்றாலே அந்தச் சோலையின் அழகும் தெய்வத் தன்மையும் விளங்கும். அத்தகைய சோலை கள் நிரம்பிய சாரலில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக் கின்றன; வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்றன. மரம் ஏறச் சலியாத குரங்குகள் கூட ஏறி அறியாத மரங்கள் பல அங்கே உண்டு. அந்த இடத்தில் விளக்கத்தோடு கூடிய செங்காந்தள் மலர்ந்திருக்கிறது. விளக்கு வைத்தாற் போன்ற ஒளியோடு அந்தக் காந்தள் ஒளிர்கிறது. அது முருகனுக்கு உரிய மலராதலின் அதன்கண் வண்டு மொய்ப்பதில்லை. அத்தகைய காந்தளாலாகிய பெரிய குளிர்ந்த கண்ணியை முருகன் தன் திருமுடியிலே அணிந்திருக்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/69&oldid=643632" இலிருந்து மீள்விக்கப்பட்டது