பக்கம்:வழிகாட்டி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ8 வழிகாட்டி

திருமேனி அழகும் அணிகலன்களும் மலர்க் கோலமும் படைத்த அணங்குகள் ஆடும் மலைச்சாரற் சோலையிலே தெய்வத் தன்மை நிரம்பிய இடத்தில் காந்தள் மலர்ந்ததனால் வண்டு மூசுவதில்லை. முருகன் திருமுடிக்கு அணியும் கண்ணி காந்தள். அது வளரும் இடம் என்பதனால் அரமகளிர் அவ்விடத்தை ஆடிப் பாடும் இடமாகத் தேர்ந்தனர் போலும்!

கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன். (கோழி ஓங்கியதும், பகைவரை வென்று சங்காரம் செய்யும் வெற்றியை அறிவுறுத்துவதுமாகிய கொடி நெடுங்காலம் வாழ்க என்று வாழ்த்தி, பலர் ஒருங்கு கூடி, சிறப்புத் திகழ்கின்ற மலைப்பக்கமெல்லாம் எதி ரொலி செய்யும்படியாகப் பாடித் தெய்வப் பெண்கள் ஆடும் சோலைகளையுடைய, குரங்கும் அறியாத மரங்கள் நெருங்கியுள்ள மலைப்பக்கத்தில் வண்டுகளும் மொய்க் காத விளக்கைப் போன்ற காந்தளாலாகிய பெரிய குளிர்ந்த கண்ணியை அணிந்த திருமுடியை உடையவன்.)

முருகனுடைய அடி முதல் முடி வரையில் நக்கீரர் இவ்வாறு வருணிக்கிறார். அவனுடைய போகத்துக் குரிய மாலையாகிய கடம்பினையும் வீரத்துக்குரிய கண்ணியாகிய காந்தளையும் சொன்னார். அவனைப் பாடியாடும் மகளிருடைய அழகையும் அலங்காரத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/70&oldid=643635" இலிருந்து மீள்விக்கப்பட்டது