பக்கம்:வழிகாட்டி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 69

கூறினார். இனி அவன் சூரனை வேற்படையாலே சங் காரம் செய்த சிறப்பைக் கூறப் புகுகிறார்.

செவ்வேற் சேய் முருகனுடைய திருவிளையாடலைச் சொல்வது கந்த புராணம், அது மிக விரிந்தது. அதில் காணப்படும் முருகன் திருவவதாரம் முதலிய வரலாறுகளுக்கும் மற்ற நூல்களிலே உள்ள வரலாறுகளுக்கும் சிற்சில வேறு பாடுகள் உண்டு. சங்க காலத்து நூல்களில் குறிஞ்சித் தலைவனாகிய முருகவேளைக் குறித்துப் பல செய்திகள் வருகின்றன. இன்று வழக்கில் இல்லாத பல வரலாறு களும் அந்த நூல்களில் உண்டு. முருகன் சூரபதுமனைச் சங்காரம் செய்தான் என்பது இன்று வழங்கும் வழக்கு. இது முன்பும் வழங்கியது. சூரன் மாமரமாகிக் கட லிடையே நின்றான் என்றும், அவனை வேலால் இரு துண்டாக்கினான் முருகக்கடவுள் என்றும் கந்தபுராணம் கூறும். சூரன் குதிரை முகமும் மனித உடம்பும் உடை யவன் என்றும், அவனுக்குப் பாதுகாப்பாகவும் உயிர் நிலையாகவும் அசுரர்களுடைய மந்திர சக்தியால் வலி பெற்ற மாமரம் ஒன்று இருந்ததென்றும், வேர் மேலும் பூங்கொத்துக்கள் கீழுமாகக் கடலிடையே அது நின்றதென்றும், அதனை முருகன் வேலால் தடிந்து சூரனை அழித்தானென்றும் பழைய வரலாறுகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. பழைய நூலாகிய திரு முருகாற்றுப்படையிலும் இத்தகைய செய்திகள் உள்ளன. பூமி தோன்றுவதற்கு முன்னாலே தோன்றியது கடல். பாரைக் காட்டிலும் முதிர்ந்த அந்தக் கடல் கலங் கும்படியாக உள்ளே புக்கு, சூரனைக் கொன்ற சுடர்விடு கின்ற இலையையுடைய வேலாயுதத்தை உடையவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/71&oldid=643637" இலிருந்து மீள்விக்கப்பட்டது