பக்கம்:வழிகாட்டி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வழிகாட்டி

முருகன். அந்த வேலாலே சூரன் அஞ்சவும் அசுரர் குலம் அடியோடு அழியும்படியாகவும் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த மாமரத்தைத் தடிந்தான். இந்தப் போரில் உணவு பெற்ற பேய்கள் களித்தன. ஒரு பேய் மகளை நக்கீரர் வருணிக்கிறார்.

பேய் மகள் களிக்கூத்தாடுகிறாள். வயிறு நிரம்ப உணவு கிடைத்துவிட்டால் ஆடுவதற்கு என்ன குறைவு? தலைமயிர் உலர்ந்து பரட்டையாக நிற்கிறது. பற்களின் கோரத்தை என்னவென்று சொல்வது! ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் அவை பிறழ்ந்து தோன்றுகின்றன. பெரிய வாய், எப்போதும் சுழல்கின்ற விழியையுடைய கண்ணாலே பார்க்கும் பார்வை குடலைக் குழப்புகிறது. காதுகள் மார்பு வரையில் தொங்கி அவளுடைய பெரிய தனங்களிலே மோதுகின்றன. அந்தக் காதுக ளில், கழன்று விடுமோ என்று தோற்றும் கண்களையுடைய கோட்டானும் பாம்பும் தொங்குகின்றன. அவள் உடம்பு முழுவதும் சொரசொரவென்றிருக்கிறது. அவள் நடந் தால் காண்பவர் நெஞ்சம் திடுக்கிடும். இப்படிப் பயங் கரமான காட்சியையுடைய பேய் மகள் போர்க்களத் திலே கொம்மாளம் போடுகிறாள். போர்க்களத்தில் கிடக்கும் உடம்புகளைப் பீறியதால் இரத்தம் கசியும் நகத்தினால் ஒரு தலையில் கண்களைத் தோண்டி உண் கிறாள். பிறகு அந்த நாற்றத்தையுடைய கருந்தலையை, வளையை அணிந்த தன் பெரிய கையிலே ஏந்தி, வாயால் நிணத்தை மென்று கொண்டே ஆடுகிறாள். அசுர ரெல்லாம் பயப்படும்படியாகச் சென்று, முருகவேள் வெற்றி பெற்ற போர்க்களத்தைப் பாடித் தோளை வீசித் துணங்கைக் கூத்து ஆடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/72&oldid=643639" இலிருந்து மீள்விக்கப்பட்டது