பக்கம்:வழிகாட்டி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 71

இவ்வாறு பேய்மகள் துணங்கைக் கூத்து ஆடும்படி யாக முருகன் சூரசங்காரம் செய்தான். குதிரை முகமும் மனித வடிவுமாகிய இரு பேருருவத்தைப் படைத்த சூரனது உடம்பு அஞ்சும்படியாக ஆறு திருவுருவங் களை எடுத்துச் சென்று, அசுரர்களுடைய வெற்றித் திற லெல்லாம் ஒழியும் படி, கவிழ்ந்த பூங்கொத்தையுடைய மாமரத்தை வெட்டினான். அவ்வாறு வெட்டிய மறு வில்லாத கொற்றத்தையும், ஒருவராலும் அளந்தறிய முடியாத புகழையும் உடைய செவ்வேற் சேய் முருகன்.

பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடர்.இலை நெடுவேல், உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் சாதிற் பினர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரற் - கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா நிணந்தின் வாயள் துணங்கை தூங்க, இருபே ருருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழினர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய். (பாரில் முதிர்ந்த குளிர்ச்சியையுடைய கடலானது கலங் கும்படியாக அதனுள்ளே புகுந்து, சூரனாகிய அசுரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/73&oldid=643642" இலிருந்து மீள்விக்கப்பட்டது