பக்கம்:வழிகாட்டி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வழிகாட்டி

தலைவனைக் கொன்ற சுடர்விடுகின்ற இலையை யுடைய நெடிய வேலாலே, உலர்ந்த மயிரையும் பிறழ்ந்த பல்லையும் ஆழமான வாயையும் சுழல்கின்ற விழியையும் பசிய கண்ணையும் பயத்தைத் தரும் பார் வையையும் கழன்றாற் போன்ற கண்ணையுடைய கோட்டானோடு கூடிய பாம்பு தொங்கப் பெரிய முலையை மோதுகின்ற காதையும் சொரசொரப்பை யுடைய உடம்பையும் அச்சம் உண்டாக்கும் நடையையும் உடைய பயங்கரமான பேய்மகள் இரத்தம் அளைந்த கூரிய நகத்தையுடைய விரலாலே கண்ணைத் தோண்டி உண்ட மிக்க நாற்றத்தையுடைய கரிய தலையை ஒள்ளிய தொடியணிந்த வளைந்த கையிலே ஏந்திக் கண்டார் வெருவரும்படியாக, வென்ற அட்ட போர்க்களத்தைப் பாடித் தோளை வீசி நிணத்தைத் தின்னும் வாயையுடை யவளாய்த் துணங்கைக் கூத்து ஆடும்படியாக, இரண்டு பெரிய வடிவையுடைய ஒரு பெரிய சூரனது உடம்பானது அஞ்சும்படி ஆறு வேறு உருவத்தோடு சென்று அசுரர் களது நல்ல வெற்றி கெட்டுப் போகுமாறு தலைகீழாகக் கவிழ்ந்த பூங் கொத்துக்களையுடைய மாமரத்தை அழித்த குற்றமற்ற வெற்றியையும் யாராலும் அறிதற்கரிய நல்ல புகழையும் உடைய செவ்வேற் சேய்.

முதல் - தலைவன், அடிமரம். உலறிய - காய்ந்து போன கதுப்பு - மயிர். சூர்த்த - அச்சத்தைத் தரும். பினர் - சொரசொரப்பு. மோடு - உடம்பு. தொட்டு - தோண்டி முடை - நாற்றம். துணங்கை - கைகோத்து ஆடும் ஒருவகைக் கூத்து. எய்யா - அறியாத.)

வாழ்த்து

அழகனும் பெருவீரனுமாகிய முருகனுடைய திரு

வடியினிடம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/74&oldid=643644" இலிருந்து மீள்விக்கப்பட்டது