பக்கம்:வழிகாட்டி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 73

புலவனுக்கு வழி காட்டுகிறார் நக்கீரர். வாக்காலும் மனத்தாலும் தொடுதற் கரிய முருகனை அடைய வேண்டுமென்று விரும்புவதே பெரிய காரியம். அப்படி விரும்பி வந்த ஒருவனை, "நீ செய்யப் புகுந்தது நல்ல காரியம் அப்பா. நன்றாக முயன்று பார். வெற்றியை அடைவாய்' என்று உற்சாகம் மூட்டுவது பெரிய உப காரம். நல்லிசைச் சான்றோராகிய நக்கீரர் புலவனைத் தட்டிக் கொடுக்கிறார்; 'முருகன் எவ்வளவு சிறப்புடை யவன்! அவனையா நீ தேடிச் செல்கிறாய்? நல்ல காரி யம். நீ நினைத்த காரியம் கைகூடும். இதோ நான் வழி சொல்கிறேன்' என்று வாழ்த்துகிறார். இது நக்கீரர் கருணைத் திறத்தைப் புலப்படுத்துகிறது. வழிகாட்டி களாக இருப்பவர்கள் கருணையோடு உற்சாகம் மூட்டி வழிகாட்ட வேண்டும் என்ற கருத்தையும் இது தெளி வாக்குகிறது. 'ஏன் ஐயா, உமக்கு ஷடகூடிரம் வருமா? விரதம் இருக்க முடியுமா? மலை மேல் ஏறு வீரா? இல்லாவிட்டால் உம்முடைய ஜபம் சாயாது. முருகனைக் காண்பது கிள்ளுக் கீரையா? பேசாமல் வந்த வழியைப் பார்த்துப் போம்" என்ற முறையில் உபதேசம் செய்யும் மேதாவிகளும் உலகத்தில் இருக்கிறார்கள். நக்கீரர் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் அல்லர். அவர் எப்படி ஊக்க மூட்டுகிறார், பார்க்கலாம்.

செவ் வேற் சேயின் சேவடியைத் தியானிக்கும் உள்ளம் படைத்திருக்கிறாய். அந்தத் தியானமே உன் உள்ளத்தை, செய்ய வேண்டிய காரியத்தை முடித்த செம்ம லுள்ளம் ஆக்கி விடும். உள்ளத்தே பொய் யின்றித் தியானம் செய்தால்தான் இறைவன் திருவருள் கூடும். ஆகவே, முருகன் திருவடியினிடத்தே செல்லும் செம்ம லுள்ளத்தோடு நல்ல சங்கற்பத்தை நீ செய்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/75&oldid=643646" இலிருந்து மீள்விக்கப்பட்டது