பக்கம்:வழிகாட்டி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய்

ஆறுமுகன்

திருச்சீரலைவாயில் முருகன் ஆறு முகங்களோடும் பன்னிரண்டு கரங்களோடும் சென்று தங்குபவன் என்று சொல்லும் வாயிலாக, அவனுடைய திருமுகங்களின் செயல்களையும் திருக்கரங்களின் செயல்களையும் புலவர் விரித்துரைக்கிறார்.

முருகன் அலைவாயிலே சென்று தங்குவதற்காக, எழுந்தருளுகிறான். அடியவருக்கு அருள் செய்யும் பொருட்டு யானையின்மேல் ஊர்ந்து வருகிறான். அந்த யானைக்குப் பிணிமுகம் என்று பெயர். முருகனுக்கு ஆட்டுக்கிடாய், மயில், யானை என்ற மூன்று வாகனங் கள் உண்டு. யானை வாகனத்துக்குப் பிணிமுகம் என்று பெயர். திருத்தணிகையில் முருகன் சந்நிதியில் யானை வாகனம் எதிரில் நிற்பதை இன்றும் காணலாம்.

முருகன் எழுந்தருளும் யானையைச் சிறிது கவனிக் கலாம். அதைச் சாதுவான யானை என்று சொல்வதற் கில்லை. முருகன் அதைச் சில சமயங்களில் அடக்கி ஒட்ட வேண்டிய அவசியம் உண்டு போலும் அதன் மத் தகத்தில் அங்குசத்தின் கூரிய நுனி பதிந்த வடு இருக் கிறதே. நெற்றியிலே பட்டம் பளபளக்கிறது. அதன் உடம்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு மணிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/82&oldid=643662" இலிருந்து மீள்விக்கப்பட்டது