பக்கம்:வழிகாட்டி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் 81

தொங்குகின்றன. 'ஆனைவரும் பின்னே, மணி ஒசை வரும் முன்னே' என்ற பழமொழிதான் தெரியுமே. யானை நடக்கும்போது அந்த மணிகள் மாறி மாறி ஒலிக்கின்றன. அது நடக்கத்தான் நடக்கிறது. ஆனால் எத்தனை வேகம்! காற்றுத் தான் களிறாக வந்ததோ என்று சொல்லும்படி இருக்கிறது நடை. கடு நடை போட்டுக் கொண்டு வரும் அதை எதிர்த்துத் தடுக்க முடியுமா? யமனைத் தடுத்து நிறுத்தும் பேர்வழி யாரா வது உலகத்தில் இருக்கிறார்களா? கூற்றத்தைப் போன்ற மாற்றுவதற்கரிய மொய்ம்பை உடையது அது.

இத்தகைய யானையின்மேல் ஏறி வீற்றிருக்கும் முருகனது திருக்கோலம் தனி அழகோடு இலங்குகிறது. புதுப்புது எழிலும் கோலமும் கொள்ளும் பேரழகன் முருகன். இப்போது ஆறுமுக அழகனாக, பன்னிருகைப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறான்.

வைந்நுதி பொருத வடுவாழ் வரிதுதல் வாட மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின், கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந்த தன்ன வேழமேல் கொண்டு. (அங்குசத்தின் கூரிய நுனி பதிந்தமையால் உண்டான தழும்பு உள்ள கோட்டையுடைய நெற்றியில் வாடாத பொன்னரி மாலையையும், பட்டத்தோடு அசைய மணிகள் மாறி ஒலிக்கும் பக்கங்களையும், வேகமாகிய நடையை யும் யமனைப் போன்ற தடுப்பதற்கரிய வலிமையையும் உடைய, காற்று எழுந்தாற் போன்ற யானையின் மேலே ஆரோகணித்து-முருகன் எழுந்தருளுகின்றான்.

வ.க.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/83&oldid=643665" இலிருந்து மீள்விக்கப்பட்டது