பக்கம்:வழிகாட்டி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வழிகாட்டி

வை-கூர்மை, நுதி-நுனி, ஒடை-நெற்றிப் பட்டம். துயல் வர-அசைய. இரட்டும்-மாறி ஒலிக்கும். மொய்ம்பு-வலிமை. கால்-காற்று.)

சற்றே கண்ணெடுத்துப் பாருங்கள். அவனது திரு முடியில் இரத்தினக் கிரீடம் பொலிகின்றது. நல்ல கிரீடத்தில் தாமம், முகுடம், பதுமம், கோடகம், கிம்புரி என்று ஐந்து உறுப்புக்கள் அமைந்திருக்க வேண்டும். முருகன் அணிந்த திருமுடி இந்த ஐந்து உறுப்புகளும் குறைவற அமைந்தது; நல்ல வேலைப்பாடுகளெல்லாம் செய்து முற்றியது. பொன்னாற் சமைந்த இந்தக் கிரீடத்தில் மாணிக்கங்கள் ஒளி வீசுகின்றன. பொன்னாகிய நிலைக் களத்திலே அதன் நிறத்தினின்றும் வேறுபட்ட நிறமும் தம்முள்ளே வெவ்வேறான நிறங்களும் பொருந்திய மணிகள் சுடர் விடுகின்றன.

இந்த மணிமுடிப் பெருமானின் திருமுகங்களுக்கு இருபாலும் செவிகளில் பொன்னால் அமைந்த மகரக் குழைகள் அசைகின்றன. அசையும்போது மின்னுகின்றன. வானத்திலே விளங்கும் மதியைச் சூழ்ந்து நட்சத்திரங்கள் ஒளி விடுவதைப் போல இருக்கிறது, அந்தக் காட்சி.

ஐவேறு உருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப. (ஐந்து வேறு உறுப்புக்களை உடையதும் செய்ய வேண்டிய வேலைப்பாடுகள் நிரம்பியதுமாகிய கிரீடத் தில், விளங்கும் நிறத்தால் மாறுபட்ட அழகிய மணிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/84&oldid=643667" இலிருந்து மீள்விக்கப்பட்டது