பக்கம்:வழிகாட்டி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் 83

மின்னல் விட்டு விளங்கி மின்னுவதைப் போல, முடி யிலே பொலிய, ஒளி தங்கி அசையும், கூறுபாடுகள் அமைந்த பொன்னாலாகிய மகரக்குழைகள், வானத் திலே விளங்கும் தண்மையையும் ஒளியையும் உடைய சந்திரனைச் சூழ்ந்து அகலாத நட்சத்திரங்களைப் போல விளங்கி மின்ன. -

இமைப்பு - மின்னுதல், பொற்ப-விளங்க. நகைஒளி. துயல்வரூஉம் - அசையும். கவைஇ- சூழ்ந்து. அவிர்வன - விளங்குவனவாய்.)

முருகன் தியானிப்பவர்களின் உள்ளத்தே நடஞ் செய்பவன், அவன் திருக்கோலத்தை விரதமுடைய தவசிகள் நன்கு அறிவர். கேடில்லாத விரதம் இருந்து முருகன் திருவருளைப் பெற வேண்டுமென்று எண்ணி முயன்று தம் சங்கற்பம் நிறைவேறப் பெற்ற அன்பர் களுடைய உள்ளத்துக்குள்ளே பொருந்தி எழுவன. முருகனுடைய ஒளியும் வண்ணமும் பெற்ற முகங்கள், அந்த முகங்களுக்குள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரி யத்தைச் செய்கிறது.

தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே. (கேடில்லாத விரதத்தையுடைய தம் தவமாகிய தொ ழிலை முடிக்கும் ஆற்றல் பெற்ற முனிவர்களது மனத் திலே பொருந்தித் தோன்றுகின்ற ஒளியும் நிறமும் பொருந்திய முகங்களுக்குள் - தா-கேடு. கொள்கைவிரதம். முடிமார்-முடிப்பவர்.)

இந்த உலகத்தில் உள்ள பொருள்களைப் புறக் கண்ணுக்குத் தோற்றுவிப்பவை மூன்று சுடர்கள். பகலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/85&oldid=643669" இலிருந்து மீள்விக்கப்பட்டது