பக்கம்:வழிகாட்டி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வழிகாட்டி

சூரியனும், இரவில் சந்திரனும் அக்கினியும் இல்லை யானால் உலக முழுவதும் இருள் மண்டிக் கிடக்கும். பரந்த இருளே இயற்கையாக இந்த ஞாலத்துக்கு உரியது. இந்த மாயிருள் ஞாலம் நன்றாக விளங்க வேண்டு மானால் ஒளி வேண்டும். ஒளி இல்லையேல் கண் இருந்தும் பயன் இல்லை. ஒளியையே இறைவனாகப் போற்றுவது வேதம்.

புறத்திருளைப் போக்குவதற்குப் புற ஒளி எவ்வாறு இன்றியமையாததோ அவ்வாறே அக இருளைப் போக்கு வதற்கு அகவொளி அவசியம். அக இருளாவது அறி யாமை. அதனை நீக்கும் ஒளி ஞானம். உலகம் முழு வதும் அறியாமை நிரம்பியது. வெறும் உலக உணர்வு மாத்திரம் படைத்த உயிர் அஞ்ஞான முடையதென்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகத்தினுடேயிருந்து எல்லாவற்றையும் இயக்கு விக்கும் ஒரு பெரும் பொருளையும், இந்த உலகத்திலே வாழப் புகுந்த உயி. ராகிய பொருளையும், இவ்விரண்டுக்கும் உரிய தொடர்பையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் நிலை வெறும் உலகியலறிவால் உண்டாகிறது. அது மாறி, மேலே சொன்னவற்றைத் தெரிந்து கொள்ளும் நிலை வந்தால் அகத்தே படர்ந்த இருள் மறைந்து ஒளி உதய மாகும். அவ்வொளியாகிய ஞானம் இறைவன் அருளால் உண்டாகும்.

எனவே, இருள்தரு மாஞாலத்தில் புற இருளையும் அக இருளையும் நீக்குவதற்குத் துணையாக நிற்பது இறைவன் திருவருள். முருகன் அவ்விரண்டு இருளை யும் போக்க வல்லவன், அவனுடைய ஆறு திருமுகங் களுள் ஒன்று மாயிருள் ஞாலம் குற்றமின்றி விளங்கும்

டியாகப் பல கதிரைவிரித்துப் பரப்புகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/86&oldid=643672" இலிருந்து மீள்விக்கப்பட்டது