பக்கம்:வழிகாட்டி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் 85

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம். (பெரிய இருள் படைத்த உலகமானது குற்றமில்லாமல் விளங்கும்படியாகப் பலகதிர் விரிந்து விளங்குவது ஒரு முகம்.

மறு - குற்றம். விரிந்தன்று-விரிந்தது.)

இந்த முகம் தன்னுடைய கதிர்களை வீசிக் கொண்டே விளங்குகிறது, சில கதிர்கள் சூரியனுடைய செங்கதிர்களாக உருப்பெறுகின்றன. சில கிரணங்கள் சந் திரனது தண்ணிலவாக உருக்கொள்கின்றன. சில கதிர்கள் அக்கினியின் வெம்மை நிலவிய ஒளியாக அமைகின்றன. இன்னும் சில கதிர்கள் அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானமாக உட்புகுகின்றன. ஆகவே, பலவகைக் கதிர் களை உடையதாயிற்று இந்த முகம்.

இரண்டாவது முகம் வரம் கொடுக்கும் முகம். முரு கனை நினைந்து உருகி அன்பு செய்வார் அவனை வாயார வாழ்த்துகின்றனர். அவர்களுடைய அன் பினாலே உள்ளம் குளிர்ந்து அவர்கள் விருப்பப்படி யெல்லாம் வளைந்து கொடுப்பவன் முருகன். பக்தர் களுக்கு இனியவன். 'பக்தருக்கு வாய்த்த பெருமாளே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார். பக்தர்கள் உள்ளம் பொருந்தும்படியாக, அவர்களிடம் எப்படிச் சென்றால் இன்பத்தை அடைவார்களோ அப்படி அமைந்து இனி தாகச் சென்று வரம் கொடுப்பவன் முருகன். பெரு வள்ளல்களாக இருப்பவர்களுக்கு ஈகையிலே ஓர் இன்பம் உண்டு. அதுபோலப் பக்தர்களுக்கு வரம் கொடுப்ப திலே முருகனுக்கு ஆசையும் இன்பமும் அதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/87&oldid=643674" இலிருந்து மீள்விக்கப்பட்டது