பக்கம்:வழிகாட்டி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வழிகாட்டி

ஆர்வலர் ஏத்துவதைக் கேட்ட அளவிலே அவர்களுக்கு வரம் அருள வேண்டும் என்ற காதல் அவன் திருவுள்ளத் திலே சுரக்கின்றது, மிகவும் உவகையோடு வரத்தை அளிக்கிறான்; அவர்கள் வேட்கையை நிறைவேற்று கிறான். இவ்வாறு வரம் அளிக்கும் அருட்செயலைச் செய்கின்றது, முருகனது இரண்டாவது திருமுகம்.

• 9 ° 4 • " ، ، ، ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்துஇனிது ஒழுகிக்

காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே. (ஒரு முகம், அன்புடையவர் துதிக்க. அவர்களுக்கு ஏற் கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத் தோடு மகிழ்ந்து வரத்தைக் கொடுத்தது.

ஆர்வலர் - அன்புடையார். கொடுத்தன்று - கொடுத்தது.)

சூரபதுமன் முதலிய அசுரர்கள் பலரை அழித்தவன் முருகன். அவன் தேவர்களுக்குப் படைத்தலைவன். தேவர்களின் பகைவர்களை வேரறுக்கும் கடமை என்றும் அவனுக்கு உரியது. சுரர்களைக் காப்பாற்றும் பொருட்டு அசுரர்களை ஒடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டவன். அசுரர்கள் எப்போதும் சுரர்களுக்கு இடைஞ்சல் பண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

உலகத்தில் அந்தணர் வேள்வி செய்யுங்கால் தேவர் களை அழைத்து அவர்களுக்கு அவியுணவு வழங்குவர். தேவர்களுடைய சுகபோகங்களைத் தம்முடையனவாக ஆக்கிக்கொள்ள அசுரர்கள் முந்துவார்கள். அப்போது தேவர்களுக்குரிய உணவு அவர்களுக்குச் சேர வேண்டும் என்பதை உன்னி, யாகங்களைப் பாதுகாக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/88&oldid=643676" இலிருந்து மீள்விக்கப்பட்டது