பக்கம்:வழிகாட்டி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவ ബ് 87

வேலையைத் தேவசேனாபதியாகிய முருகன் மேற் கொள்கிறான். வேள்வியில் 'சுப்பிரமண்யோம்' என மும்முறை கூறி ஆகுதி வழங்குதல் மரபென்பர். ஆதலின் முருகன் யாகசம்ரக்ஷணை செய்யும் தொழிலையும் உடையவன். அவனுடைய திருமுகங்களில் ஒன்று, வேதமந்திர விதிப்படி மரபு தவறாது அந்தணர் புரிகின்ற வேள்விகளைத் தீங்கின்றிப் பாதுகாக்க நினைக்கின்றது.

... . . . . . ஒருமுகம் - மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்ஒர்க் கும்மே. (வேதமந்திர முறையின்படியே சம்பிரதாயத்தினின்றும் வழுவாத அந்தணர்களுடைய யாகங்களை நன்கு நிறை வேற்றத் திருவுள்ளம் கொள்ளும், ஒரு முகம்.

மரபுளி-சம்பிரதாயத்தில். ஒர்க்கும்-நினைக்கும்.) வேள்வி காவலனாகிய முருகனை, 'யாக முனி வர்க்குரிய காவற்காரனும், 'அந்தண்மறை வேள்வி காவற்கார' என்று அருணிகிரிநாதர் போற்றுவர்.

முருகனை ஞானபண்டிதனென்று வழிபடுவது பெரியோர் மரபு. ஞானமே திருவுருவாக வாய்த்த பிரான் அவன். பலருக்கு மெய்ஞ்ஞான உபதேசம் செய்ததாகப் புராணங்கள் கூறும். சிவபிரானுக்கே உப தேசம் செய்தமையின் குமரகுருபரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். அவன் எல்லாக் குருக்களிலும் மேலான குரு.

நூல்களின் வாயிலாகத் தெரியாத பொருள்கள் பல. அவற்றை ஆசிரியர் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். எல்லாப் பொருள்களையும் எல்லா ஆசிரியர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/89&oldid=643679" இலிருந்து மீள்விக்கப்பட்டது