பக்கம்:வழிகாட்டி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வழிகாட்டி

விளக்குவது முடியாத காரியம். ஒர் ஆசிரியரால் விளக்க இயலாததைப் பின்னும் திறமையையுடைய மற்றோர் ஆசிரியர் விளக்குவார்.

நூல்களால் அறியப்படாமல் எஞ்சி நிற்கும் பொருள் பலவற்றுள் சிலவற்றைச் சில வகை ஆசிரியர் விளக்கு வர். அவராலும் விளக்குதற்கு அரியனவாய் எஞ்சி நிற் பன பல. இன்னும் சிறந்த ஆற்றல் படைத்த ஆசிரியர் கள் எஞ்சிய பொருள்களில் மேலும் சிலவற்றை விளக்குவார்கள். வித்தியா குருக்களால் விளக்க முடி யாத பலவற்றை ஞானகுரு விளக்குவார். அவராலும் விளக்க முடியாமல் எஞ்சிய பொருள்கள் உண்டு. இப் படிக் குருவுக்குப் பின் குருவாக விளக்கும் முறையில் எஞ்சி நிற்கும் பொருள்கள் குறைந்து வரும். கடைசி யில் யாராலும் விளக்குதற்கரிய பொருளாகச் சில எஞ்சி நிற்கும். அவற்றை விளக்கத் தக்கவன் யார்? முருகன் தனித் தலைமைப் பெருங்குரவன் ஆதலின் அவன் இறுதி யிலும் இறுதியாக எஞ்சிய பொருள்களை ஞான வேட்கை உடையவர்கள் இன்புறும் படியாக விளக்கு வான். இத்தகைய அருட்செயலால் தெளிவில்லாத் திசைகளெல்லாம் விளக்கம் பெறுகின்றன. இந்தக் காரியத்தை முருகனுடைய மற்றொரு முகம் செய் கின்றது. சந்திரனைப் போல விளங்குவது அந்த முகம். அறிவு நிறைவுக்குச் சந்திரனை உவமையாகச் சொல்வர். இங்கே உருவத்தாலும் ஆற்றலாலும் அந்த முகம் திங் களைப் போலத் திசை விளக்குகின்றது.

هاE5ډيا)5ئ®... ... ... ... ... ... எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/90&oldid=643681" இலிருந்து மீள்விக்கப்பட்டது