பக்கம்:வழிகாட்டி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவ ாய் 39

(ஒருமுகம், நூல்களாலும் ஆசிரியர்களாலும் விளக்க முறாமல் எஞ்சிய பொருள்களை, அவற்றை உணரப் புக்க ஞானவேட்கை உடையார் இன்பம் உறும்படியாக ஆராய்ந்து, சந்திரனைப் போலத் திசையெல்லாம் விளக்கும்.

ஏமுற - இன்பம் உண்டாகும்படி.) முருகன் வீரர்களுக்குள் வீரன்; படைகளுக்குள்ளே சிறந்த வேலாயுதம் படைத்த பெரு வீரன். தேவர் களுக்கு வரும் இடுக்கண்கள் சாமானியமானவை அல்ல. அவர்களை எந்தச் சமயத்தில் பங்கப்படுத்தலா மென்று காத்திருப்பவர்கள் அசுரர்கள். இத்தகைய அபாய நிலையில் தேவர்கள் இருப்பினும் அவர்கள் அச்சமின்றித் தம்முடைய சுக போகங்களை அநுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம் அவர்களைப் பாதுகாக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட பெருவீரனாகிய முருகன் இருப்பதுதான். பகைவர்களாக வருபவர் களைத் தேய்த்து மிக நீண்டு செல்லும் யுத்தங்களை முடித்துக் கோபம் கொண்ட உள்ளத்தோடே போர்க் களத்தில் வெற்றிக்கு அறிகுறியாகக் களவேள்வி செய் பவன் அவன். இந்தக் களவேள்வியைச் செய்வது அவன் திருமுகங்களில் ஒன்றன் வேலை.

... . . . . ...ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட் டன்றே. (ஒரு முகமானது செறுகின்றவர்களை அழித்து, வந்த போர் களைப் போக் கிக் கறு வுதல் கொண்ட உள்ளத்தோடே களவேள்வியைச் செய்தது.

செறுநர் - எதிர்ப்போர். சமம்-போர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/91&oldid=643683" இலிருந்து மீள்விக்கப்பட்டது