பக்கம்:வழிகாட்டி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9Ꮗ வழிகாட்டி

செல்சமம் முருக்கி’ என்பதற்குத் தன் திருவுள்ளத் திலே ஏறிய நடுவு நிலைமையைப் போக்கிவிட்டு என்றும் அர்த்தம் கொள்ளலாம். எல்லோரிடத்தும் ஒரே மாதிரியான கருணையைப் பாலிக்க வேண்டிய முருகன் அந்த நடுநிலையை மாற்றி அசுரர்களை மறக் கருணை யாலே கொல்ல வேண்டுமென்று எண்ணுகின்றானாம்.

போர்க்களத்தில் வெற்றி பெற்றவன் அந்தக் களத்தைத் தனதாக்கிக் கொண்டு, அங்கே இறந்து துணிந்து கிடக்கும் உடல்களைக் கொண்டு துர்க்கைக்கு வேள்வி செய்வது மரபு. இதைக் களவேள்வியென்று கூறுவர்.

முருகன் வள்ளியெம் பெருமாட்டியினிடம் அள வற்ற காதல் உடையவன். வேடருக்கிடையே வளர்ந் தாலும் தன்பால் அன்பு பாராட்டிய திறத்தை நினைந்து தானே வலியச் சென்று அப்பிராட்டியை ஆண்டு கொண் டவன். புலவர்கள் பலரும் வள்ளியின்பால் முருக வேளுக்குரிய காதல் திறத்தைப் பலபடியாக வருணிப் பர். காதல் துறைகளெல்லாம் அப்பிராட்டிபால் நிகழ்த் தியதாகப் பாடுவர். களவின்பம் தமிழ் மரபுப்படி மிகச் சிறந்தது. ஒரு தலைவன், தலைவியை அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தானே கண்டு உளங்கலந்து அளவளாவும் இன்பமே சிறந்த இன்பம். இவ்வின் பத்தை முருகன் வள்ளியெம்பிராட்டிபால் பெற்றான். குறவர் மடமகளும் கொடிபோன்ற இடையை உடைய வளுமாகிய மடவரால் வள்ளியோடு இன்புற்று மகிழும் செயலைப் புரிவது அவன் திருமுகங்களுள் ஒன்று.

... ... ... ...ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/92&oldid=643686" இலிருந்து மீள்விக்கப்பட்டது