பக்கம்:வழிகாட்டி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் 93.

(ஒரு முகமானது, குறவர் மடமகளும் கொடி போன்ற

இடையையுடைய மெல்லியலாளுமாகிய வள்ளியோடு

இன்பம் புணர்ந்து மகிழ்ந்தது.)

பன்னிருகைப் பெருமாள்

முருகன் தன் ஆறு திருமுகங்களாலும் இயற்றும் செயல்களைக் கூறும் வாயிலாக, அவன் பேரொளி படைத்தலைவன், அடியார்க் கெளியவன், வேள்விக் காவலன், ஞானவள்ளல், வீரன், இன்பத் தலைவன் என் பதைப் புலப்படுத்தினார். அந்தத் திருமுகங்களுக்கு ஏற்ற வகையில் அவன் திருக்கரங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு முகத்தின் செயலுக்கும் பொருத்தமான தொழிலை இரண்டிரண்டு கரங்கள் செய்கின்றன. மேலே சொன்ன படி ஆறு முகங்களும் தாம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து வருதலின் அவற்றிற்கு ஏற்பக் கைகள் பன்னிரண்டும் இயங்குகின்றனவென்று அக் கைகளின் செய்கைகளையும் இனி விளக்குகிறார்.

ஆங்கம், மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின். (அவ்வாறு அந்த ஆறு திருமுகங்களும் தமக்குரிய கடமை களைப் பயின்று செய்து வருவதனாலே - பின்வரும் கைகளும் ஏற்ற தொழில் புரிகின்றன எனச் சொல்ல வருகிறார்.)

முருகன் திருமார்பில் பொன்னாரம் புரளுகின்றது. அகன்ற பெருமையையுடைய மார்பு அது. அந்தத் திரு மார்பிலே மூன்று வரிகள் தோளளவும் சென்றிருக் கின்றன. உத்தம ஆடவர்களுக்குரிய இலக்கணம் அது. சிவந்த வரிகளை மார்பிலிருந்து வாங்கிக் கொண்டு விளங்குகின்றன திருத்தோள்கள். அத்தோள்கள் மிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/93&oldid=643688" இலிருந்து மீள்விக்கப்பட்டது