பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 1 I

துடித்துநின்றன். லயமாகத் தாண்டிச் செல்லும் லாவகத்தை இழந்து நின்ருன்.

தடைமீது நடப்பது போன்ற லாவகம் அன்று அவனிடம் இல்லை. மீண்டும் இரண்டு தடைகளில் தட்டுத் தடுமாறி ஒடியபோது, அவல்ை தோற்க முடிந்ததே தவிர, அந்த முடிவினை ஏற்க முடியவில்லை. எல்லோருக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் போல, அவனும் ஏமாற்றத்தின் எல்லைக்குச் சென்று, யார் கண்ணிலும் படாமல் வெறுப்புடன் மறைந்து கொண்டான்.

அமெரிக்கப் பிரதிநிதியாக இலண்டன் செல்லும் ஆசை அந்தத் தோல்வியுடன் ஒய்ந்து ஒழிந்தது. 82 முறை வென்ற வீரன் 83வது முறையாக வெல்லும் பாக்கியம் இல்லாமல் போனது டன், பெரும்புகழ் பறிக்கப்பட்டு விட்ட தோல்வி யைத் தாங்கியவாறு மீண்டும் அங்கே வந்தான். போன தைப்பற்றிப் பு ல ம் பு வ த ற் கா. க அல்ல! தோற்ருலும் தொடர்வேன்' என்று ஒர் செய்தியைச் சொல்ல.

அடுத்து நடக்க இருந்தது 100 மீட்டர் ஒட்டம். அதில் உலக சாதனை நிகழ்த்தியிருந்த மெல்பேட்டன் (Melpatton), மற்றும் சிறந்த வீரனுக பார்னி ஈவல் (Barney Ewell) என்ப வர்கள் நிச்சயம் வெற்றி வீரர்கள் என்று ஏற்கனவே நிர்ண யிக்கப்பட்டது போன்ற உறுதியுடன் அமைந்திருந்த போட்டி அது. அதில் நானும் கலந்துகொள்ளப் போகிறேன் என்று தில்லார்டு வந்து நின்றதும், அதிர்ச்சிக்கு ஆளானவர்கள் ஆச்சரியத்துடன் நின்ருர்கள்.

தோல்வியைத் தாங்கிக்கொண்ட நெஞ்சம், துணிந்து இன்னும் ஒரு போட்டிக்கு, இதுவரை போட்டியிடாத போட்டி நிகழ்ச்சியில் வரச் செய்திருக்கிறது என்ருல் பார்த் துக்கொள்ளுங்களேன். ஜெசி ஒவன்ஸ்போல விரைவோட்டக் காரன் (Sprint) ஆவதற்கு முதலில் முயன்றபோது, அவனது பயிற்சியாளர்தான் தடைதாண்டும் போட்டியில் ஈடுபடுத் திர்ை. அதன் பின்னேதான் அதில் பழகிப் புகழ்பெற்ற வீரகை மாறினன் ஹேரிசன் தில்லார்டு.