பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எஸ். நவராஜ் செல்லையா

அந்த அனுபவம், ஆற்றல், ஆண்மை ஆவேசம் எல்லாம் ஒன்று சேர்ந்து 100 மீட்டர் ஒட்டத்தில் ஈடுபடுத்தி விட்டது. முடிவு? உலகசாதனை செய்த வீரர்களை பின்னடையச்செய்து விட்டு, தில்லார்டு முதல் வீரனாக வந்து விட்டான். தோற்ற வன் துணிந்தான். தொடர்ந்தபின் வென்ருன். லண்டன் மாநகருக்குச் சென்ருன். அந்த ஒலிம்பிக் பந்தயத்திலும் 100 மீட்டர் நிகழ்ச்சியில் வென்ருன். உலகப்புகழ் கொண்டான்.

அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவன் நி ம் ம தி யடைந்துவிடவுமில்லை.1952ஆம் ஆண்டு 29 வயதானவீரனுக இருந்த தில்லார்டு, அதே 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் அமெரிக்கப் பிரதிநிதியாக மீண்டும் ஹெல்சிங்கி எனும் நகருக்கு வந்து, முன்னே வா ய் ப் பி ழ ந் த தடை தாண்டும் போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தையும் பெற் முன். பெருமையுற்முன்.

இதுவரை இரண்டு விரைவோட்டங்களில் (ஒன்று 100 மீட்டர் மற்ருென்று 110 மீட்டர் தடைதாண்டி ஒட்டம்) தங்கப்பதக்கம் பெற்றவர்கள் தரணியிலே கிடையாது என்ற வானளாவிய புகழைப் பெற்ருன். நீக்ரோ இனத்தில் ஏழைக் குடும்பத்தில் தோன்றிய ஹேரிசன் தில்லார்டு, கலங்காத நெஞ்பின கை விளையாட்டுத் துறையில் விளங்கினன்.

தோற்ருலும் தொடர்வேன்' என்று துணிந்து நின்று: தேர்வுக்குச் சென்று, தேறி வந்து, இரண்டு ஒலிம்பிக் பந்த யங்களில் வென்று உலகப் புகழ்பெற்ற வீரனை நாமெல்லாம் நினைந்து நினேந்து வீர நெஞ்சம் பெறுவோம். விவேகமுடன் பயிற்சிசெய்வோம். வாழ்வோம். வாழ்வில் நாமும் முன்னேறு வோம் என்று இன்றே சபதம் எடுப்போமாக!