பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 எஸ். நவராஜ் செல்லையா

வெற்றி மேடையில் நின்று, தங்கப்பதக்கத்தை வாங்கிக் கொண்டு, ஒலிம்பிக் மைதானத்தை விட்டு ஓவன்ஸ் வெளியே வந்த போதும், வியர்வை படிந்த சட்டையைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, ஒவன்ஸ் தோள் மேல் கை போட்டு அணைத்தவாறு வந்தான் லட்ஸ்லாங் பார்வையாளர்கள் எல் லோரும் பரபரப்படையவில்லை. ஒற்றுமையான உள்ளங் களைக் கண்டு கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரே ஒலிம்பிக் பந்தயத்தில், நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற ஒவன்ஸ், எத்தனை முறை அந்தப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிருன் பாருங்கள். நான்கு முறை 100 மீட்டர், நான்கு முறை 200 மீட்டர்; இரண்டு முறை 4X100 மீ. தொடரோட்டம்; இரண்டு முறை நீளத்தாண் டல், இவ்வாறு 12 முறை போட்டிகளில் கலந்து கொண்ட போது, தான் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சி யிலும் ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தினன் அல்லது ஒலிம்பிக் சாதனைக்கு இணையான நேரத்தை ஏற்படுத்தினன் என்று ஒலிம்பிக் சாதனைப் பட்டியல் விளக்குகின்றது.

எதிர்ப்புக்கள் ஏராளம் இருந்த ஜெர்மன் நாட்டில், சர் வாதிகாரி இட்லரின் ஏராளமான நோக்கில், எரிச்சல் மிகுந்த பார்வைக்கு ஆளான ஓவன்ஸ், யார் கெடுத்தாலும் கெட மாட்டேன்’ என்று மனேதைரியத்துடன், தன் திறமையை வெளிப்படுத்திக் காட்டி வீரப்பதக்கங்களை வென்ருன். உலகமே அவனது ஆற்றலைப் போற்றியது. புகழ்ந்தது. இகழ்ந்த கூட்டம் எதுவும் செய்ய முடியாது தலையைத் தாழ்த்தி, மெளனமாக வணக்கம் செய்தது.

வெற்றி வீரனக தாயகம் திரும்பி வந்த ஜெசி ஒவன்சுக்கு அமெரிக்க நாடே வீர மரியாதை அளித்து கெளரவித்தது. உண்மையான உழைப்புக்கு முன்னே, பொருமையும் சூதும் சூழ்ச்சியும் என்ன செய்துவிட முடியும். அதன் பின்னும் ஓவன்ஸ் அயர்ந்துவிடவில்லை. எல்லாம் முடிந்தது என்று