பக்கம்:வழிப்போக்கன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

மறுநாள் மாலை மாங்குடியை நெருங்க நெருங்க சுந்தரத்தின் உள்ளத்தில் ஒருவித பரபரப்பும் விவரிக்க முடியாத உணர்ச்சிகளும் குறுகுறுத்தன.

'காமுவைக் காணப்போகிறோம்' என்ற மகிழ்ச்சியில்அவன் இதயம் துள்ளியது.

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தபோது “பாட்டி பாட்டி! அப்பா வந்துட்டா” என்று சுந்தரத்தின் மகள் சாரதா குரல் கொடுத்தாள். சாரதாவைக் கண்டதும் காமுவும் ஒரு வேளை இங்கேதான் இருக்கிறாளோ? என்று சந்தேகித்தான் சுந்தரம்.

பெற்ற தாய் பதறிக் கொண்டு ஒடி வந்தாள்.

"வாடா சுந்தரம்! உன்னை உயிரோடு திரும்பப் பார்ப்போமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். என் வயிற்றிலே பாலை வார்த்தாய்!” என்று கண்ணீர் துளிக்கக் கூறினாள்.

"காமு எங்கேம்மா?" என்று ஆவல் நிறைந்த கண்களோடு விசாரித்தான் சுந்தரம். அவன் அப்படிக் கேட்டதுமே பார்வதியம்மாளின் முகம் வாடிவிட்டது.

"ஏம்மா ஒன்றும் சொல்லாமல் நிற்கிறாய்?..." துடித்தான் சுந்தரம்.

"ஆறு மாசமாக அவள் ஆஸ்பத்திரியில் இருக்கிறாளடா! டி.பி.யாம். உன்னைப் பிரிந்த துக்கமே அவளைப் படுக்கையில் இடத்தி விட்டது..." என்று வேதனையோடு கூறினாள் அவன் தாய்.

"டி.பி.யா? ஆஸ்பத்திரியில் இருக்கிறாளா? எந்த ஆஸ்பத்திரியில் அம்மா? அதிர்ச்சியில் ஒரு கணம் சுந்தரத்தின் இதயமே நின்றுவிடும் போலிருந்தது.

"பெருந்துறையில் இருக்கிறாள். அடையாளமே தெரியாதபடி துரும்பாக இளைத்துப் போயிருக்கிறாள். நான்கூடப்போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அவள் அப்பாவும் அம்மாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/100&oldid=1315374" இலிருந்து மீள்விக்கப்பட்டது