பக்கம்:வழிப்போக்கன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

ராயல்சீமை வெயில் நெருப்பை வாரி வீசிக்கொண்டிருந்தது. மண்டை வெடிக்கும் அந்த வெயிலேயும் பொருட்படுத்தாது, புகைவண்டி நிலையத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தான் சுந்தரம். உள்ளத்தில் ஏதேதோ உணர்ச்சிகள், எண்ணங்கள்!

"நாளேக்கே மாங்குடி போய்விடலாம். காமுவையும் நாளைக்கே போய்ப் பார்த்து விடலாம். அவள் சற்றும் எதிர் பாராத நேரத்தில், எதிரில் போய் நின்றதும் அவள் வியப்பினால் விக்கித்து போவாள்." இதை எண்ணும் போதே சுந்தரத்தின் உள்ளத்தில் ஒர் இன்பச் சிலிர்ப்பு உண்டாயிற்று.

'அப்புறம்...ஒரு நாள் கிராமத்தில் தங்கிவிட்டு மறுநாளே குறவன் கூறிய அந்தக் காட்டுக்குப்போய், அவன் மறைத்து வைத்துள்ள நகைப் பெட்டியைத் தேடி எடுக்க வேண்டும்.

அந்தத் திருட்டுச் சொத்தில் ஒரு காலணவும் தொடக் கூடாது, பாவம்! சொத்தைப் பறிகொடுத்தவர்கள் எவ்வளவு வயிறு எரிகிறார்களோ!'

சுந்தரத்துக்கு இன்னெரு எண்ணமும் உண்டாயிற்று.

"அந்த நகைகளை அப்படியே கொண்டுபோய்ப் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துவிட்டால் என்ன?”

'அப்படியானால் குறவனுக்கு கொடுத்த வாக்குறுதி? அவன் குடும்பத்துக்கு உதவி செய்வதாக கூறிய உறுதிமொழி... கூடாது கூடாது; குறவனை ஏமாற்றக் கூடாது; அவன் குடும்பத்தைத் தவிக்க விடுவது நம்பிக்கைத் துரோகம். மகா பாவம்! அவனுடைய மனைவியும் குழந்தையும் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களோ?'

"என் குடும்பத்தை மறந்துவிட்டு, குறவனின் குடும்பத்தை பற்றி நான் கவலைப்படுகிறேன்! சுந்தரம் சிரித்துக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/99&oldid=1313616" இலிருந்து மீள்விக்கப்பட்டது