பக்கம்:வழிப்போக்கன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

"பூனைபோல் வந்து என் காலை மிதித்தீர்களே, அதை மறந்து விட்டீர்களா?" என்றாள் சகுந்தலா.

"நீ அலறிக்கொண்டு எழுந்து ஒடினாயே?". என்று சிரித்தான் சுந்தரம்.

"பின்ன என்னவாம்; அப்படித்தான் பயமுறுத்துகிற தாக்கும்!” என்றாள் சகுந்தலா.

பேசிக்கொண்டே இலையிலிருந்த பொடிமாசைத் தீர்த்து விட்டான் சுந்தரம். அதைக் கண்ட சகுந்தலா களுக் கெனச் சிரித்து விட்டாள்.

"என்ன சிரிக்கிருய்?"

"இலையில் வைத்த பொடிமாசைக் காணோமே என்று சிரித்தேன்!"

"பொடிமாஸ் ரொம்பப் பிரமாதம்!"

"ஒட்டல் சமையல்களைப் புகழ்கிறீர்களாக்கும்! இதில் எனக்கென்ன பெருமை?"

"நீ சமைத்துப் போடு; உன்னையும் புகழ்கிறேன்...”

"தங்களுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டிய கைதான் இது. அவள் குரலில் வருத்தமும் ஏக்கமும் தொனித்தன.

சுந்தரம் அளவுக்கு மீறியே சாப்பிட்டு விட்டான். பிறகு, "உனக்கு ஏதாவது மிச்சம் வைத்திருக்கிறேன இல்லையா, சகுந்தலா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

"உங்களைப் பார்த்தது முதலே என் உள்ளமும் வயிறும் மகிழ்ச்சியால் நிரம்பிக் கிடக்கிறது, எனக்குச் சாப்பாடுகட வேண்டியதில்லை. ம்...நாம் எப்படியோ இருந்திருக்க வேண்டியவர்கள்!" தன் ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளிப்படுத்தினாள் அவள்.

விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுந்தரம் தனக்கு வந்த தூக்கத்தைக் கொட்டாவிகள் மூலமாகப் போக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/113&oldid=1313636" இலிருந்து மீள்விக்கப்பட்டது