பக்கம்:வழிப்போக்கன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134


சரத்தை அவள் தலையில் சூடினாள். 'சுந்தருக்கு மல்லிகை மணம் என்றால் ரொம்பப் பிடிக்கும்' என்று தனக்குள்ளாகவே எண்ணிக்கொண்டாள் அப்பேதை.

"அக்கா இந்தாருங்கள்! இதையெல்லாம் அணிந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சகுந்தலா, தன்னுடைய நகைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துத் தன் கைகளாலேயே காமுவுக்கு அணிவித்து அலங்காரம் செய்தாள்.

"இதெல்லாம் ஏது சகுந்தலா?"

"எல்லாம் தங்கள் கணவர் கொண்டு வந்து என்னிடம் கொடுத்ததுதான்" என்றாள் சகுந்தலா.

"என் கணவரா? அவருக்கு ஏது இந்த நகைகளெல்லாம்?" வியப்புடன் கேட்டாள் காமு.

"திருட்டுப் போன என்னுடைய நகைகளைச் சுந்தரம்தான் கொண்டு வந்து கொடுத்தார்" என்று முழு விவரங்களையும் காமுவிடம் சொன்னாள் சகுந்தலா.

"இதுவரை என்னிடம் சொல்லவேயில்லையே!”

"சமயம் வரும்போது சொல்லலாம் என்றுதான் காத்திருந்தேன். இந்த நகைகளெல்லாம் இனி உங்களுக்குத்தான் சொந்தம். நாங்களாகவே வாழப் போகும் எனக்கு அதில் பெருமை உண்டு" என்றாள் சகுந்தலா.

றுநாள் விடியற் காலையிலேயே எழுந்துவிட்ட சுந்தரம் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தான். இரண்டு குதிரை வண்டிகளில் எல்லோரும் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்கள். புறப்படுமுன் சர்மா சுந்தரை அழைத்து ஒரு கவரைக் கொடுத்து "இந்தா இதை செலவுக்கு வைத்துக்கொள்" என்றார். அதில் ஆயிரம் ரூபாய் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/134&oldid=1321979" இலிருந்து மீள்விக்கப்பட்டது