பக்கம்:வழிப்போக்கன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

எனக்கென்னவோ சுந்தரத்தை ரொம்பப் பிடித்திருக்கிறது. உங்களுக்குத் தெரியாத யோசனையை நான் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்......இன்றைய மெயிலுக்கே நான் மெட்ராசுக்குப் போய், நாளை டில்லிக்குப் புறப்பட வேண்டும். எல்லாவற்றையும் முடிவு செய்து, இன்னும் ஒரு மாதத்துக்குள் எனக்குக் கடிதம் எழுதுங்கள்!” என்று கூறிய ராமநாதன், அன்று இரவே புறப்பட்டு விட்டார்.

5

“நேற்றிலிருந்து காகம் கரைகிறது; ஒருவேளை சர்மா பசங்களை அழைத்துக்கொண்டு வருகிறாரோ, என்னவோ?” என்றாள் பார்வதி.

“ஆமாம்; காகம் எப்பவும்தான் கரைந்து கொண்டிருக்கிறது. சர்மா வருவதாயிருந்தால் கடிதம் போட்டிருக்க மாட்டாரா?” என்றார் கங்காதரய்யர்.

“காக்கா கத்துவதில் எத்தனையோ தினுசு இருக்கிறது. விருந்தாளி வருவதை அறிவிக்கும்போது அது கத்துகிற மாதிரியே வேறு. அதெல்லாம் பெண்களுக்குத்தான் தெரியும்!” என்றாள் பார்வதி அம்மாள்.

அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “உன் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும். அதோ சர்மாவே வந்துவிட்டார்!” என்றார் கங்காதரய்யர் உற்சாகத்துடன்.

“சுந்தரம்கூட வரானே! அந்தண்டை யாரு? சகுந்தலாவா? ஏதேது!” என்று வியந்தாள் பார்வதி அம்மாள்.

சகுந்தலாவும் சுந்தரும் சேர்ந்து வரும் அழகைக் கண்டபோது பார்வதியம்மாள் என்னென்னவோ கோட்டை கட்டி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/30&oldid=1322775" இலிருந்து மீள்விக்கப்பட்டது