பக்கம்:வழிப்போக்கன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

“மழை வரும்போல் இருக்கிறதம்மா, சுந்தரை உள்ளே வந்து படுத்துக்கொள்ளச் சொல்லட்டுமா?”

கதவைத் திறந்து அவனே இந்தக் கட்டிலில் வந்து படுத்துக்கச் சொல்!” என்றாள் பார்வதி.

சகுந்தலா எழுந்துபோய் வாசல் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே சுந்தர் பொய்த் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தான்

“சுந்தர்! சுந்தர்!” என்று கூப்பிட்டாள் சகுத்தலா. அப்போதும் அவன் எழுந்திருக்கவில்லை, அவள் தன்னைத் தொட்டுத்தான் எழுப்பட்டுமே என்பதற்காக!

அவள் கூஜாவிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவன் முகத்திலே தெளித்தாள்.

“மழை! மழை!” என்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான் சுந்தர்.

“ஆமாம். மழை உள்ளே வந்து படுத்துக்கோ! புளுகுத் தூக்கமா தூங்கறே?” என்று கூறிவிட்டு, உள்ளே போனாள் அவள். சுந்தர் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்தான். அவனிடமிருந்து திமிறிக்கொண்டு அவள் உள்ளே ஒடிவிட்டாள்.

சுந்தர் இயற்கையை வாழ்த்திக்கொண்டே கூடத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில்படுத்துக் கொண்டான். அத்தக் கட்டிலுக்குப் பக்கத்தில் சகுந்தலா படுத்திருந்தாள். அவளுக்கு அடுத்தாற்போல் படுத்திருந்தாள் பார்வதி அம்மாள். தூக்கம் அவளை நன்றாக வசப்படுத்தியிருந்தது. அறைகுறையாக ஒளி வீசிக்கொண்டிருந்த சிம்னி வெளிச்சத்தில் அவளுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

அம்மா நீ தூங்கிவிட்டாயா? என்று கேட்டான் சுந்தர்; பதில் இல்லை.

அம்மா தூங்கிவிட்டாள் என்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/36&oldid=1309656" இலிருந்து மீள்விக்கப்பட்டது