பக்கம்:வழிப்போக்கன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

‘கிடுகிடு’ வென்ற இடியின் உறுமல் வானமெங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

சுந்தரம் மெதுவாக கட்டிலில் புரண்டான். இரு கால்களையும் ஆகாயத்திலே தூக்கி, அப்படியே தரைப் பக்கமாகச் சாய்த்துச் சரித்துத் தரையிலே பாதங்களைப் பூப்போல் பதிய வைத்தான். கட்டில் ஒசையும் இடிக் குரலும் இரண்டறக் கலந்த சந்தர்ப்பம்...

அடிமேல் அடிவைத்து சகுந்தலாவை நெருங்கிவிட்டான். அவன் அப்போது தூங்கிக் கொண்டிருந்தாளா. விழித்துக் கொண்டிருந்தாளா என்று அவனுக்கும் தெரியவில்லை; நமக்கும் தெரியவில்லே!

சுந்தர் கீழே குனிந்து, மெதுவாகக் காலடி எடுத்துவைத்த போது, சட்டென அவன் கால்கள் சகுந்தலாவின் மீது பட்டுவிடவே, “ஐயோ!” என்று அலறிவிட்டாள். பார்வதி அம்மாள் பதறி விழித்துக்கொண்டு, “என்ன சகுந்தலா, என்ன?” என்று கேட்டாள்.

சுந்தர் இரண்டே எட்டில் தாவிப் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டான். விஷயத்தைப் புரிந்துகொண்ட சகுந்தலா, “ஏதோ பூனேபோல் இருக்கிறது; எழுந்து விளக்கை ஏற்றுகிறேன்!” என்று கூறிச் சமாளித்தாள்.

சுந்தருக்கு அப்புறம்தான் மூச்சு வந்தது.

“சரி, உனக்குப் பயமாயிருந்தால் என் பக்கத்தில் வந்து படுத்துக்கொள்!” என்றாள் பார்வதி அம்மாள்.

விளக்கை ஏந்திய சகுந்தலா, “திருட்டுப் பூனை, ஒடிவிட்டது போலிருக்கிறது!” என்று சுந்தரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே கூறினாள்.

பிறகு,பார்வதிஅம்மாளை ஒட்டிப்படுத்துக்கொண்டாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/38&oldid=1309623" இலிருந்து மீள்விக்கப்பட்டது