பக்கம்:வழிப்போக்கன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சற்று நேரத்துக்கெல்லாம் இடியும் மின்னலும் அதிகமாகி மழை பிடித்துக்கொள்ளவே தெருக்கூத்து பாதியிலேயே நின்றுவிட்டது. அவ்வளவுதான்; கூத்துப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் ஒரு நொடியில் கலைந்து விட்டனர். சிறிது சிறிதாகச் சேர்த்த பணம் ஒரே விநாடியில் கரைந்து விடுவதைப்போல.

சர்மாவும் கங்காதரய்யரும் வீட்டுக்குத் திரும்பி வந்த போது திண்ணையில் படுத்திருந்த சுந்தரைக் காணவில்லை. சர்மாவுக்குத் 'திக்' கென்றது. கங்காதரய்யர் கதவைத் தட்டியதும் சுந்தரம்தான் வந்து கதவைத் திறந்தான். உள்ளே சென்ற சர்மாவின் கண்கள் முதல் காரியமாக 'சகுந்தலா எங்கே இருக்கிறாள்' என்று தேடின.

கூடத்தில் அவளும் பார்வதியம்மாளும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு படுத்திருப்பதைக் கண்டபோதுதான்அவருக்கு நிம்மதி பிறந்தது.

மறு நாளே சர்மா ஆற்காட்டுக்குப் புறப்பட்டுவிட்டார்.

"என்ன சுந்தர், நீயும் வருகிறாயா?" என்று கேட்டார் சர்மா.

“இப்போது விடுமுறைதானே? அவன் இன்னும் கொஞ்ச நாட்கள் மாங்குடியிலேயே இருந்துவிட்டுப் பிறகு வரட்டும்” என்றார் கங்காதரய்யர்.

"சகுந்தலாவும் பத்து நாட்கள் இங்கேதான் இருக்கட்டுமே? மாங்குடிக்கு அவள் வந்ததே இல்லை!" என்றாள் பார்வதி அம்மாள்.

"ஆகட்டும்; இன்னும் எத்தனையோ முறை வரவேண்டியிருக்கும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/39&oldid=1320974" இலிருந்து மீள்விக்கப்பட்டது