பக்கம்:வழிப்போக்கன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


அவளை நான் அழைத்துச் செல்கிறேன்; ஆற்காட்டில் பாட்டிக்கு ஒத்தாசையாக யாருமே இல்லை” என்றார் சர்மா.

சகுந்தலா கங்காதரய்யரையும் பார்வதி அம்மாளையும் நமஸ்காரம் செய்துவிட்டு, குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந் தாள். வண்டி நகர்ந்தது.

சுந்தர் வாசலுக்கு வந்து நின்று சகுந்தலாவையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பிரிவால் அவனுக்கு மாங்குடியே வெறிச்சென் றாவது போல் இருந்தது.

ற்காட்டுக்குத் திரும்பிய சர்மா மனம் குழம்பி, அமைதி அற்றவராய் அலைந்து கொண்டிருந்தார். அதற்குக் காரணம் சுந்தரின் ஜாதகத்தை அவர் கட்டம் கட்டமாக அலசிப் பார்த்துவிட்டது தான். பார்த்தபின் அவர் அவனிடம் அந்தரங்கமாகக் கொண்டிருந்த அன்பு, அபிமானம், நம்பிக்கை எல்லாமே துகள் துகளாகச் சிதறிவிட்டன.

காலமெல்லாம் கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்த நோட்டுக்கள் ‘இனி செல்லாது’ என்று திடுமென அறிவிக்கப் பட்டது போன்ற அதிர்ச்சியை அவர் அடைந்தார். சுந்தரின் ஜாதகத்தில் வேறு எவ்விதக்கோளாறுகள். இருந்திருந்தாலும் அவர் அவற்றைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார். அவனுடைய ஆயுள் பாவமே சரியில்லாதபோது, அதை அவரால் எப்படி அலட்சியம் செய்ய முடியும்?

சுந்தரைத் தத்து எடுத்துக் கொண்டு, தம்முடைய சொத்துக்களுக்கெல்லாம் அவனை வாரிசாக்கி, சகுந்தலாவை மணம் முடித்து வைத்து, தம்முடைய அந்திம கால ஈமக் கடனையும் அவன் கையாலேயே முடித்துக்கொள்ள வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியிருந்த சர்மாவைக் கண்டு சுந்தரின் ஜாதகம் எக்காளச் சிரிப்புச் சிரித்து எள்ளி நகை யாடியது!

அன்று முதலே சர்மாவின் அறிவு குழம்பிற்று மேற்கொண்டு சுந்தரை ஆற்காட்டில் வைத்துக்கொண்டு படிப்புச் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/40&oldid=1306865" இலிருந்து மீள்விக்கப்பட்டது