பக்கம்:வழிப்போக்கன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

“இன்ன வேலை செய்யறே?”

“ஒண்னுமில்லை!”

“ஆள் வாட்டசாட்டமாகத்தான் இருக்கே, இப்படி வந்து நில்லு!”

சுந்தரம் அவன் காட்டிய இடத்தில் நின்றான். கை இரண்டையும் மேலே தூக்கு!

சுந்தரம் கைகளை உயர்த்தினான்.

“மூச்சை உள்ளுக்கிழுத்து ‘டம்’ பிடி!”

சுந்தரம் மூச்சை அடக்கினான்.

“சரி, மூச்சை விடு!”

மூச்சை விட்டான்.

“குனிந்து கால் கட்டை விரலைத் தொடு!”

தொட்டான்.

“உன் விலாசம் என்ன?”

சொன்னான்

“போட்டோ வைச்சிருக்கிறாயா?”

“இல்லை.”

“சரி, உள்ளே போ!”

சுந்தரம் விழித்தான்.

“போப்பா, உள்ளே!”

“உள்ளேயா! நான் ஒரு தப்பும் செய்யலையே?”

சுந்தரம் கெஞ்சினான்.

“உள்ளே போய் அந்தப் பெங்சிலே உட்காரு இன்ஸ்பெக்டர் வந்ததும் விசாரிப்பாரு. மத்தியானம் சாப்பாடு உனக்கு இங்கேதான்!”

சுந்தருக்குத் துக்கம் துக்கமாக வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/52&oldid=1309646" இலிருந்து மீள்விக்கப்பட்டது