பக்கம்:வழிப்போக்கன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

சாயந்திரம் கடற்கரைக்குப் போய்விட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டான். புரண்டுப்புரண்டு படுத்ததுதான் மிச்சம்; தூக்கம் எப்படி வரும்?

திடீரென்று வாசலில் நாதசுவர இசை கேட்கவே, படுக்கையைவிட்டு எழுந்து போய்க் கீழே எட்டிப் பார்த்தான்.

காஸ் லைட் வெளிச்சத்தில் நாதசுவர இசை முழங்க, ஆடவரும் பெண்டிரும் சூழ்ந்து வர, கலியான ஊர்வலம் ஒன்று மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காருக்குள் மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்து இருந்தனர்.அவர்களே சுற்றிலும் துளி இடம்கூட இல்லாதபடி வாண்டுகளின் கூட்டம்! பெண்கள் சூடியிருந்த மலர்களின் நறுமணம் ஜம்மென்று காற்றிலே மிதந்து வந்தது. அந்த மணத்தை நுகர்ந்தபோது, அன்றொரு நாள் சகுந்தலா முல்லைமொட்டால் தன்னைச் சீண்டி விளையாடிய காட்சி அவன் நினைவுக்கு வந்தது.

“இந்த நேரத்தில் ஆற்காட்டிலும் ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும்!”

சுந்தரம் பெருமூச்சு விட்டான். அந்த மூச்சில் எத்தனையோ இன்ப நினைவுகளும், இன்ப நிகழ்ச்சிகளும் பொதிந்து கிடந்தன!

சுந்தரம் ‘தமிழ் போதினி’ காரியாலயத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, வழக்கம்போல் நாலைந்து கடன்காரர்களுக்குச் “சால்ஜாப்பு” சொல்லிக்கொண்டிருந்தார் அந்தப் பத்திரிகையின் முதலாளி. கடன்காரர்களுக்குப் பதில்கூறி அனுப்புவதில் அவருக்கு நிகர் அவரே தான்!

சுந்தரைக் கண்டதும் அவர், “என்ன சுந்தர், ஏதாவது படம் எழுதிக்கிட்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“ஆமாம், சார்!”

“எங்கே, காட்டு பார்க்கலாம்?” சுருட்டுப் புகையை ஒருமுறை உறிஞ்சி ஊதினர்; பிறகு, சுந்தர் கொடுத்த படத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/63&oldid=1309629" இலிருந்து மீள்விக்கப்பட்டது