பக்கம்:வழிப்போக்கன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

சுந்தரம் அவரை வெறிக்கப் பார்த்தான்.

“ஏன் அப்படிப் பார்க்கிறே? பத்திரிகை ஆபீசிலே பணமா கண்ணாலே பார்க்கிறது ரொம்பக் கஷ்டம். என் கைக்கே அது சிக்கறதில்லையே, இந்தக் கடன்காரனுங்க எங்கே விட்டு வைக்கிறானுங்க?”

சுந்தரம் வேலையை ஒப்புக்கொண்டான். வேறு வழி? இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததன் பயனுக்காகச் சித்திரம் எழுதுவதிலும் அவனுக்கு நல்ல தேர்ச்சி ஏற்பட்டு விட்டது. அதுதான் அவன் கண்ட பலன்!

திருவல்லிக்கேணியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்குத் தினமும் நடந்தேதான் போய் வருவான் அவன். சம்பளமாகக் கிடைக்கும் தமிழ் போதினி பிரதிகளை வழியிலுள்ள வெற்றிலைப்பாக்குக் கடைகளில் கொடுத்து விற்கச் சொல்லி, போகும்போதும் வரும்போதும் அவை விற்று விட்டனவா என்று பார்த்துக்கொண்டே இருப்பான். சில சமயங்களில் அவை விற்றுப் போவதும் உண்டு! மொத்தத்தில் சுந்தரம் அந்தப் பத்திரிகையில் ‘ஆர்ட்டிஸ்’டாகச் சேர்ந்த பிறகு, தமிழ் போதினியின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. ஆமாம்; முன்பெல்லாம் ஆயிரத்து இருநூறு பிரதிகளே அச்சிடப்பட்டு வந்த அப் பத்திரிகை, இப்போது 1250 பிரதிகளாக உயர்ந்து விட்டது! சுந்தரத்துக்கு ஐம்பது கொடுக்க வேண்டும் அல்லவா?

9

ரு நாள் மாலை அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவன், கதவின் கீழே விழுந்து கிடந்த கடிதத்தைக் கையிலே எடுத்துப் பார்த்தான்.

“சுந்தருக்கு, ஆசீர்வாதம். வரும் ஆனி மாதம் 27-ந் தேதி வெள்ளிக்கிழமை உனக்குத் திருமணம் செய்வதாக நிச்சய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/65&oldid=1322758" இலிருந்து மீள்விக்கப்பட்டது