பக்கம்:வழிப்போக்கன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மாகியிருக்கிறது. நம் பக்கத்து ஊர்ப் பெண்தான்; நானும் உன் தாயாரும் போய்ப் பெண்ணைப் பார்த்தோம். பெண் எங்கள் மனசுக்குப் பிடித்திருக்கிறாள். கலியாணத்துக்கு இன்னும் பத்தே நாட்கள்தான் இருக்கின்றன. இத்துடன் அச்சிடுவதற்காக முகூர்த்தப் பத்திரிகை எழுதி அனுப்பியிருக்கிறேன். நீ வரும்போது அதைப் ‘பிரிண்ட்’செய்துகொண்டு வரவும். ஒரு வாரம் முன்னதாகவே வந்து விடவும்.

இப்படிக்கு,
கங்காதரய்யர்"

கடிதத்தைப் படித்து முடித்ததும் சுந்தரின் முகம் சட்டென வாட்டமுற்றது. சகுந்தலாவின் இனிய முகம் அவன் கண்முன் தோன்றியது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். தன் தந்தைமீது அவனுக்குக் கோபமாகக்கூட இருந்தது.

குறிப்பிட்ட பஸ்ஸை ஒருவன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்கும்போது, அந்த பஸ் மெதுவாக அவன் அருகில் வந்து, நிற்காமலேயே போய்விடுகிறது. அதே சமயத்தில் வேறொரு ‘ரூட்’டில் செல்லும் பஸ் ஒன்று அங்கே வந்து, அவனை அதில் ஏறிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் அவனுக்கு எப்படி இருக்கும்?

“சார்! எனக்குக் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது; பத்து நாட்கள் லீவு வேண்டும்” என்றான் சுந்தரம் முதலாளியிடம்.

“ரொம்ப சந்தோஷம்; எப்போ போகணும்? பத்து நாட்கள் வீவு வேணுமா அதுக்கு?”

“ஆமாம், சார்! அத்துடன் கலியாணப் பத்திரிகை பிரிண்ட் பண்ணனும்; நம்ம பிரஸ்லே......”

“நம்ம பிரஸ்லே வெறும் கம்போசிங்தான்; மிஷின் கிடையாது. உனக்குத்தான் தெரியுமே! நம்ம வாடிக்கையா ‘ஸ்டிரைக்’ பண்ணிகிட்டு வருவோமே, ‘காடிகானா’ பிரஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/66&oldid=1322764" இலிருந்து மீள்விக்கப்பட்டது