பக்கம்:வழிப்போக்கன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

அவங்ககிட்டே கொண்டு போய்க் கொடு, செஞ்சு கொடுப்பாங்க?”

“ப...ண...ம்?”

“பணமா! நம்ம பத்திரிகை அச்சடிக்கவே எங்கிட்டே பணம் கிடையாது; கலியாணப் பத்திரிகை அச்சடிக்க நான் எங்கே போவேன் பணத்துக்கு? விளம்பரப் பணத்தை வசூல் பண்ணிக்கிட்டு வா; அப்புறம் பார்க்கலாம்.”

சுந்தரம் அந்தக் ‘காடிகானா’ பிரஸ்ஸுக்குப் போய்க் கலியாணப் பத்திரிகையை அச்சிடக் கொடுத்தான். அச்சுக் கூலியும் காகிதமும் சேர்ந்து ஐந்தேகால் ரூபாய் ‘சார்ஜ்’ செய்துவிட்டார்கள் அந்தப் பிரஸ்சில்.

அன்று மாலேயே அவன் மாங்குடிக்குப் புறப்பட்டான்.

வேதகோஷம் முழங்க, கெட்டி மேளம் ஒலிக்க, பெண்கள் மங்கள கீதம் இசைக்க, பெரியவர்கள் ஆசீர்வதிக்க, சுபயோக சுப வேளையில் காமுவின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டான் சுந்தரம். அப்போதே அந்தப் பெண்ணின் அழகிய முகத்தையும் நன்றாகப் பார்த்துக் கொண்டான் அவன். குனிந்த தலை நிமிராமலேயே சுந்தரின் அழகிய வதனத்தை அடிக்கடி கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள் காமு. மணப்பந்தலில் கணவனின் கரம் பிடித்து உட்கார்ந்திருந்த அவளுடைய கரங்கள் கூறின.

“இன்று உங்கள் கை பிடித்த நான் இதைப் போலவே என்றென்றும் நம் இல்லற வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சுக துக்கங்களுக்கெல்லாம் கை கொடுப்பேன்.”

முகூர்த்தம் முடிந்து ஆசீர்வாதம் நடந்து கொண்டிருந்தது. மணமக்களுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த பெண்களின் கூட்டத்தில் ஒரே வேடிக்கையும் விளையாட்டும் சந்தோஷ ஆரவாரமுமாக இருந்தன. எட்டு மணிக்கே வருவதாகக் கூறியிருந்த சர்மாவைக் காணாததால் கங்காதரய்யருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/67&oldid=1322769" இலிருந்து மீள்விக்கப்பட்டது