பக்கம்:வழிப்போக்கன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70


சுந்தரும், அவன் கை பிடித்த காமுவும் சர்மாவை நமஸ்கரித்து எழுந்தார்கள். அப்போது சர்மாவுக்கு சுந்தரின் ஜாதகம் பற்றிய எண்ணம் தோன்றிவிடவே கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.

'தீர்க்க சுமங்கலீ பவ! தீர்க்காயுஷ்மான் பவ!' என்று மணமக்கள் இருவரையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார் அவர்.

மணி மூன்று இருக்கும். கலியாண வீடு நிறையக் கூடத்திலும் தாழ்வாரத்திலும் பெண்கள் கூட்டம் ஆங்காங்கே அலங்காரம் செய்து கொள்வதில் ஈடுபட்டிருந்தன.

சுந்தரம் ஒரு மூலையில் போய் முடங்கியபடி அலுப்புத்தீர தூங்கிக் கொண்டிருந்தான். 'டேய் சுந்தரம் எழுந்திருடா! நலங்குக்கு நாழியாகிறது. இந்தா காப்பி, இதைக் குடித்து விட்டுப் போய் முகம் அலம்பிக்கொண்டு வா!' என்று அவனைத் தட்டி எழுப்பினாள் பார்வதி அம்மாள்.

சுடச் சுட காப்பியை வாங்கிக் குடித்த பிறகுதான் சுந்தரத்துக்குத் துாக்க மயக்கம் தெளிந்தது. எழுந்து தோட்ட பக்கம் சென்ரறான். தட்டியினால் மறைத்துக் கட்டப்பட்டிருந்த குளியல்அறைக்குள் சென்றபோது, அங்கே சகுந்தலா கண்களை மூடிக்கொண்டு, முகம் நிறையப் பூத்திருந்த சோப்பு நுரையை கழுவிக் கொண்டிருந்தாள். சுந்தரைக் கண்டதும் வெட்கத்தினால் பதறிப்போய் வெளியே ஒட எத்தனித்தாள் அவள்.

"ஏன் ஒடறே, சகுந்தலா? உன்னை நான் விழுங்கிவிடமாட்டேன்!”

"என்னோடு நீ ஒண்ணும் பேச வேண்டாம், போ!" சகுந்தலா அவனைத் தாண்டிக்கொண்டு ஒடப் பார்த்தாள். சுந்தர் தன் கையிலிருந்த டவலால் அவளை வழி மறித்து, "உன்னைப் போகவிட மாட்டேன்!” என்று மடக்கினான்.

"என்ன விளையாட்டு இது! யாராவது பார்த்தால் ஏதாவது நினைச்சுக்க மாட்டா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/70&oldid=1322823" இலிருந்து மீள்விக்கப்பட்டது