பக்கம்:வழிப்போக்கன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

"ஏன் அவ்வளவு அவநம்பிக்கையோடு பேசுகிறாய்? காலம் இப்படியே போய் விடாது. 'நாளை' என்ற நம்பிக்கையில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. தீபம் அணையும்போது திரியே தீர்ந்து விட்டது என்று நாம் ஏன் எண்ணவேண்டும்? காற்றடிக்கும் போதோ, அல்லது எண்ணெய் வற்றிவிடும் போதோ கூட விளக்கு அணையலாம். ஆ னால் அணைந்து போகும் விளக்கு மீண்டும் ஏற்றப்படும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்தப் பொறுப்பு விளக்கேற்றி வைப்பவனுடையது. நாளேக்கே நம் வாழ்விலும் ஒளி வீசாமல் போகாது. இப் போதைக்கு எண்ணெய் ஆகிவிட்டது; அவ்வளவுதான் என்றான் சுந்தரம்.

"கைக்குழந்தையுடன் வந்தேன். இப்போது அதையும் பறிகொடுத்து விட்டு, உங்களையும்பிரிந்து எப்படிச் செல்வேன்? என்று கூறும் போதே துக்கம் அவள் தொண்டையை அடைத்துக்கொண்டது. அவள் கண்களில் தேங்கிய துயரம் உதடுகளில் இறங்கி நெளிந்தது.

காமுவின் வார்த்தைகள் சுந்தரத்தின் இதயத்தைப் பிளந்தன.

மறுநாளே, வீட்டு வாடகையைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டு, காமுவை அழைத்துக்கொண்டு போய் ஊரில்விட்டவன், அடுத்த நாள் பொழுது விடியுமுன்னரே பட்டணத்துக்குக் கிளம்பி விட்டான்.

திரும்பி வந்தது முதல் சுந்தரின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தது, தனிமை எனும் கொடுமையை அவளால் தாங்க முடியவில்லை.

உலகமே தன்னைத் தனியாக ஒதுக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது அவனுக்கு. பட்டணத்தில் வசிக்கும் அவ்வளவு பேரும் ஒன்றாகக்கூடி உல்லாசமாக வாழ்வது போலவும், தான்மட்டும் தனியாகப் பிரிந்து ஏகாங்கியாயிருப்பது போலவும் உணர்ந்தான். தனித்தனி மனிதர்களாக வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/89&oldid=1313591" இலிருந்து மீள்விக்கப்பட்டது