பக்கம்:வழிப்போக்கன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஒன்றாகக் கூடி வாழ்வதுதான் நகரவாழ்க்கை என்பதை அவன் அறியவில்லை.

இரவு நேரங்களில் அவன் மொட்டை மாடியில் படுத்த வண்ணம் ஆகாயத்திலுள்ள நட்சத்திரக் கூட்டங்களே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். நீலவானத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்துச் சிரிக்கும் அந்த வைர மலர்கள் சுந்தரத்தை நோக்கித் 'தனிமை தனிமை' என்று கண் சிமிட்டிக் கேலி செய்தன.

காமு அவன் எதிரில் தோன்றி 'என்னையும் தனிமையாக்கி விட்டு நீங்களும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?' என்று கண்ணிர் உகுத்தாள். சுந்தரின் கண்களில் நீர்த் திரையிட்டது. காமு அதில் கரைந்தாள். அடுத்த கணமே சகுந்தலா தோன்றினாள்.

"சுந்தர்! நீ என்னை மறந்து விட்டாயல்லவா? ஆனால்உன்னேக் காண நான் டில்லியிலிருந்து வந்திருக்கிறேன் பார்! என் முகத்தைப் பார்! ஆசையோடு உன் கையால் என் பின்னலை ஒரு முறை பற்றி இழுக்க மாட்டாயா? அன்போடு என் கன்னத்தைத் தொட்டுப் பார்க்க மாட்டாயா? எங்கே உன் கைகளை இப்படிக் கொண்டு வா பார்க்கலாம். சுந்தரின் கைகளைப் பிடித்துத் தன் கன்னங்களில் வைத்துக் கொண்ட போது அவளுடைய அழகுத் தோற்றத்தை நிலவு வெள்ளம் கரைத்துக் கொண்டு போய்விட்டது.

சரித்திரப் புகழ் வாய்ந்த 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதியன்று காந்தி மகாத்மா பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து 'வெள்ளையனே! வெளியேறு!!' என்று குரல் கொடுத்ததும் இந்தத் தேசமே வீறுகொண்டு எழுந்தது அல்லவா? மகாத்மாவின் அந்தக் குரல் தேசத்தின் சரித்திரத்தை மட்டும் மாற்றி அமைக்கவில்லை. சுந்தரத்தின் வாழ்வையும் அடியோடு மாற்றி ன்ட்டது.

பெரு மழை தொடங்குவதற்கு முன் வானத்தில் சீறிப்பாயும் இடியின் உறுமலைப் போல், விடுதலை இயக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/90&oldid=1313596" இலிருந்து மீள்விக்கப்பட்டது