பக்கம்:வழிப்போக்கன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னிருந்தே தேசத்தின் நாலா திசைகளிலும் புரட்சி கோஷங்கள் முழங்கிக் கொண்டிருந்தன.

காந்திஜியின் குரலினின்றும் தெறித்த சுதந்திர ஆவேசப் பொறி சுந்தரத்தின் உள்ளத்தில் புகுந்து சிறிது சிறிதாகக் கனல் விட்டுக் கனியத் தொடங்கிற்று.

"வெள்ளையனே, வெளியேறு! மகாத்மா காந்திக்கு ஜே!” என்று ஓயாமல் அவன் இதயத்தில் ஏதோ ஒரு குரல் எதிரொலி செய்து கொண்டேயிருந்தது.

நேருஜி, பட்டேல் போன்ற மாபெரும் தலைவர்களெல்லாம் கைதாகிக் கொண்டிருக்கிறார்கள். பாரத தேசமே அல்லோல கல்லோலப்படுகிறது. குண்டாந் தடிக்கும், துப்பாக்கி முனேக்கும் இலக்காகும் ஆயிரக் கணக்கான தியாகிகள் தங்கள் இரத்தத்தைத் தாய்நாட்டின் விடுதலைக்காக இந்தப் புண்ணிய பூமியில் சிந்திக் கொண்டே, “வாழ்க மகாத்மா” என்று வாழ்த்துகிறார்கள். தேச மக்களைப் பார்த்து, மகாத்மாஜி “செய் அல்லது செத்துமடி” என்கிறார்.

‘உலகம் என்னைத் தனியாக ஒதுக்கி விடவில்லை. அதோ மகாத்மாஜி என்னை அழைக்கிறார். தேசம் என்னை அழைக்கிறது. அவர்களோடு நானும் செல்கிறேன்.’

‘என்னை விட்டு விட்டா போகப் போகிறீர்கள்?’ அவன் இதயத்தில் புகுந்து கொண்டிருந்த காமு குரல் கொடுத்தாள்.

‘காமு! என்னை மன்னித்துவிடு! ஒரு கடமையை மறந்துவிட்டு இன்னொரு கடமையை ஆற்றச் செல்கிறேன். இது குற்றம்தான்; ஆயினும் சுதந்திர வெறி என் இரத்தத்தில் மேலோங்கி நிற்கிறது. எனக்கு விடை கொடு. திரும்பி வந்து உன்னை அழைத்துக்கொள்கிறேன்.’

அன்று இரவெல்லாம் தூங்கவில்லை, அவன். கண் விழித்து இருபது சுவரொட்டிகளை எழுதி முடித்தான். அந்தச் சுவரொட்டிகளில் அவன் வரைந்திருந்தது என்ன தெரியுமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/91&oldid=1314716" இலிருந்து மீள்விக்கப்பட்டது