பக்கம்:வழிப்போக்கன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

“தபாலாபீசைக் கொளுத்துங்கள்; தந்திக் கம்பத்தை வெட்டுங்கள், தண்டவாளத்தை அகற்றுங்கள்” என்ற வாசகங்கள்தான்.

எழுதி முடித்த சுவரொட்டிகளை, தானே இரகசியமாக எடுத்துக் கொண்டுபோய் இரவோடு இரவாகச் சுவர்களில் ஒட்டிவிட்டு, எந்த நிமிஷமும் போலீசார் தன்னை வந்து கைது செய்து கொண்டு போவார்கள் என்று எதிர்பார்த்துத் தன் அறையிலேயே உட்காந்திருந்தான். ஆனால் அவனை யாருமே தேடிக்கொண்டு வரவில்லை.

“இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்து விட்டு பகிரங்கமாக உட்கார்ந்திருக்கிறேன். என்னைக் கைது செய்ய யாருமே வரவில்லையே! இதற்குள்ளாகவே ஒரு வேளை பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைக் காலி செய்து விட்டுப் போய் விட்டதோ!” என்று எண்ணியபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.

தானே நேரில் போய் குற்றத்தைப் போலீசிடம் கூறித் தன்னைக் கைது செய்யும்படி கேட்டுக் கொள்ளலாமா என்று கூட ஒர் எண்ணம் தோன்றியது அவனுக்கு. ஆனால் ‘சே! அது சுத்த கோழைத்தனம்' என்ற இன்னொரு எண்ணம் அதை அழித்தது. என்னேக் கைது செய்யவே மாட்டார்களா? அப்படியானால் வேறு என்னதான் செய்வது! ஆம்; நானே ஒரு தபாலாபீசைக் கொளுத்தினால் என்ன?’ அவ்வளவுதான்; உடனே தன்னுடைய எண்ணத்தைச் செயலாக்கும் பொருட்டு வெளியே புறப்பட்டான்.

அறையைப் பூட்டிச் சாவியைக் கொண்டு போய் ராயரிடம் கொடுத்துவிட்டு “நான் கொஞ்சம் வெளியே போய் விட்டு வருகிறேன்” என்றான். “இந்தக் கார்டைக் கொஞ்சம் தபாலில் சேர்த்துவிடுகிருயா?” என்று கூறி ஒரு கார்டைக் கொடுத்தார் ராயர்.

‘நான் தபால் ஆபீசையே கொளுத்தப் போகிறேன். இவரோ அது தெரியாமல் கார்டை என்னிடமே கொடுத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/92&oldid=1314720" இலிருந்து மீள்விக்கப்பட்டது