பக்கம்:வழுக்கு நிலம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ரா. சீனிவாசன் கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அந்தப் படம் உயரத்தில் மாட்டியிருந்தது. அதை எடுக்க முயற்சி செய்யவில்லை. அதற்குக் கீழே அவருடைய படம் மட்டும் தனியாக இருந்த ஒன்று மாட்டியிருந்தது. அவர் தலையில் இருந்த சதுரமான தொப்பி நூதனமாக இருந்தது. உடம்பு முழுவதும் கருப்பு கவுனால் மூடப்பட்டிருந்தது. கையில் ஏதோ சுருளாகக் கடிதம் ஒன்று இருந்தது. அந்தப் படத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டாள். பட்டமளிப்பு விழாவிற்குப் போயிருந்த போது எடுத்துக்கொண்ட படம் என்று அவர் சொல்லியபோது அவள் உள்ளம் அடைந்த மகிழ்ச்சியை இப்பொழுது எண்ணிப் பார்த்தாள். அந்தப் படத்தை மறுபடியும் சுவரில் மாட்டினாள். "பத்தாயிரம்" என்று வாய்விட்டுச் சொல்ல ஆரம்பித்தாள். "ஆம், இதைத் தொடமுடியாது. இதன் விலை பத்தாயிரம். அந்தப் பட்டத்தின் விலை பத்தாயிரம்” என்று அவள் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றலாயின. அவளுடைய தந்தையாரின் கவனம் வந்தது. அவரைப் போன்ற கொடியவர் இந்த உலகத்திலேயே இல்லை என்று அந்த நேரத்தில் பட்டது. ஏன் அவருக்குப் பத்தாயிரம் கொடுப்பதாகச் சொல்லவேண்டும். பிறகு அதைக் கொடுக்காமல் என்னைத் தவிர்க்கவிடவேண்டும். "பாரு! உனக்குத் தெரியாதா நம் வீட்டு நிலவரம்! இருக்கிற சொத்து எல்லாம் விற்றுக் கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே நிற்பது. உன் அண்ணனைப் படிப்பிக்க வேண்டாமா? நாங்கள் ஒட்டைக் கவிழ்த்துக் கொண்டு தான் தெருத் தெருவாக." "அப்பொழுது என் அவருக்குச் சொல்ல வேண்டும். படித்தவர்; பட்டம் பெற்றவர்; இதைப்போல வரன் கிடைக்காது; எப்படியாவது இதை முடிக்கவேண்டும் என்று ஏன் திட்டமிட வேண்டும்?" "வேண்டாம். நம்ம ஊர் பக்கமே என் தம்பிக்குக் கொடுத்துவிட்டால் அவன் தங்கமாக வைத்திருப்பானே." "வைத்திருப்பான். அவள் நல்ல இடத்தில் வாழ்க்கைப் பட வேண்டும் என்று உனக்கு எண்ணமில்லையா? பாரு! நீயே சொல்லு அம்மாவுக்கு இந்தப் பட்டிக்காட்டிலேயே உன்னைக் கொடுத்து உன் வாழ்வைப்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/10&oldid=897978" இலிருந்து மீள்விக்கப்பட்டது